Tamilnadu

முடிந்தது "சோலி" பாதுகாப்பை பலப்படுத்த தமிழக காவல்துறை திட்டம் ... அரசு அதிகாரிகள் அவசர ஆலோசனை !

tamilnadu police
tamilnadu police

உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வன்னியர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, முறையான கணக்கெடுப்பு விவரங்கள் இல்லாமல் இட ஒதுக்கீடு எப்படி தர முடியும்? சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா? என பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இதனால் வன்னியர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை பெற முடியாது. இந்த வருடம் கல்வியில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை என்னவாகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக கூறிய பா.ம.க. கட்சியின் வழக்கறிஞர்கள் பாலு, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

பாமக  வழக்கறிஞர் பாலு இந்த தீர்ப்பை ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கும்படியும் நாங்கள் உச்சநீதிமன்றத்தை அணுக போவதாகவும் நீதிபதிகள் முன்பாக கோரிக்கை விடுத்தார்.

இட ஒதுக்கீட்டின் கீழ், மாணவ, மாணவிகள் ஒதுக்கீடுகளை பெற்று விட்டதாகவும் எனவே இப்போது இந்த தீர்ப்பு கடைப்பிடிக்கப்பட்டால் அவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் பாலு வாதம் முன்வைத்தார். ஆனால் இந்த வாதத்தை மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவின் போது 10.5% இட ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் இட ஒதுக்கீடு, வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்று தெளிவாக கூறி இருக்கிறோம். எனவே, இந்த தீர்ப்பை இப்போது நிறுத்தி வைப்பது மேலும் குழப்பங்களுக்கு காரணமாக மாறிவிடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதுகுறித்து உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வன்னியர் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர் சங்கத்தினர் சென்னையில் கூடினர்  , போக்குவரத்து சம்பித்தது , போக்குவரத்து பாதிக்கப்பட்டது தொடர்ந்து பதற்றமான சூழல் உண்டானது , இதையடுத்து உண்டான  அழுத்தம் காரணமாக அதிமுக ஆட்சியில் வன்னியருக்கான 10.5 % இட ஒதுக்கீட்டை  அமல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது . 

தற்போது அந்த அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில் மீண்டும் போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் வெடிக்கலாம் என்பதால் உடனடியாக பாதுகாப்பை விரிவுபடுத்த தமிழக காவல்துறை முடிவு செய்துள்ளது , இந்த விவகாரத்தை கையாளுவது எப்படி என விவரிக்க அனைத்து  கட்சி கூட்டத்தை கூட்ட  தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது .