Tamilnadu

சிங்கமாக களத்தில் இறங்கிய தமிழக பாஜக கவுன்சிலர்.. கொண்டாடும் மக்கள்.!

bjp councilor
bjp councilor

தமிழகத்தில் ஒரு சில கவுன்சிலர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு வார்டு பக்கம் செல்வதே அரிது, அதிலும் நகராட்சி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் என்றால் தங்களை அமைச்சர்கள் அளவிற்கு பில்ட்டப் கொடுப்பது பார்த்து இருக்கிறோம். சமீபத்தில் கூட தேனியை சேர்ந்த திமுக பெண் கவுன்சிலர் மற்றும் பெண் சேர்மன் இருவரும் தங்கள் தொகுதியில் நடக்கும் பணிகளில் பங்கு பிரிப்பது பற்றியும் பணம் எப்படி கிடைக்கும் என்றும் பேசும் வீடியோ வைரலானது.


இது ஒருபுறம் இருக்க தமிழகத்தை சேர்ந்த பாஜக கவுன்சிலர் தனது வார்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்ய தானே நேரடியாக களத்தில் இறங்கி குடிநீர் தேவையை பூர்த்தி செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குழித்துறை நகராட்சியில் மார்தாண்டம் பகுதியில் 16வது வார்டு மக்கள் குடிநீருக்கு சிரமபட்டதால் கவுன்சிலர் மண்வெட்டியுடன் தானே முன்வந்து களத்தில் இறங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்க குழி தோண்டும் பணிகள் பல இடங்களில் நடந்து வருகிறது. மார்த்தாண்டம் 16வது வார்டு பகுதியில் குழிதோண்டும் போது வீடுகள் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டது. தொடர் விடுமுறை என்பதால் பழுதை சீரமைக்காததால் குடிநீர் இன்றி  பொதுமக்கள் கடுமையான பாதிப்பினை சந்தித்தனர்.

வார்டு பாஜக கவுன்சிலரான ரெத்தினமணி ஒப்பந்தகாரர் மற்றும், குடிநீர் வாரியத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தானே பிளம்மர் உதவியுடன் மண் வெட்டியுடன் களத்தில் இறங்கி பழுதடைந்த உடைப்பை சரி செய்து தண்ணீர் கிடைக்க வழிவகை செய்தார்.

மேலும் ஒப்பந்த காரர்கள் ஏற்படுத்திய சேதத்தை சரி செய்து குழிகளை மூடி பொதுமக்களுக்கு தனது சேவையை செய்துள்ளார். இவரது இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர், கட்சிகளை கடந்தும் பொதுமக்கள் பலரும் தங்களது கவுன்சிலர்களும் இது போன்று மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பாஜக கோட்டையாக இருப்பதற்கு என்ன காரணம் என பலரும் கேள்வி எழுப்பும் நிலையில் இது போன்ற மக்கள் பணி செய்யும் பாஜகவினரே காரணம் என தெரியவந்துள்ளது, ஒரு வார்டு கவுன்சிலரே தற்போது களத்தில் இறங்கி தனது ஆட்டத்தை ஆடும் போது பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் எத்தனை மக்கள் பணிகளை செய்யமுடியும் எண்ணி பாருங்கள் என பாஜகவினர் மக்களிடம் எடுத்து கூறிவருகின்றனர்.


மேலும் சில


மேலும் சில

மேலும் சில