Cinema

நாங்க வாழனுமா? சாகனுமா? ஆட்சி செஞ்சு கிழிச்சது போதும் ஓடுங்க டி.ராஜேந்திரன் கண்ணீர்..!

T.Rajendran
T.Rajendran

தமிழக திரை துறையில் முக்கியமானவரும் நடிகர், இயக்குனர், இசை அமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட டி. ராஜேந்திரன் நடத்திய செய்தியாளர் சந்திப்பு இரு வேறு சந்தேகங்களை மக்கள் மத்தியில் உண்டாக்கி உள்ளது, அது குறித்தும் டி. ராஜேந்தர் தெரிவித்த கருத்து குறித்தும் பார்க்கலாம்.


இலங்கையில் வாழும் மக்களுக்கு இந்திய அரசு தற்போது செய்துள்ள உதவி மிக பெரியது, தமிழகத்தில் கருணாநிதிக்கு இந்த நிலை ஏற்பட காங்கிரஸ் கட்சியே காரணம், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என அனைவரும் மெரினாவில் முதல்வராக ஆட்சியில் இருக்கும் போது மறைந்தார்கள் ஆனால் கருணாநிதி அவ்வாறு இல்லாமல் ஆட்சியில் இல்லாமல் மறைந்தார் இதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியுடன் வைத்தக்கூட்டு தான் என அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார் டி.ஆர்.

மேலும் நீங்கள் ஆட்சி செய்து கிழித்தது போதும் கிளம்புங்க இலங்கையை விட்டு கிளம்புங்க என இலங்கையில் ராஜபக்சே குழுவினருக்கு எதிராக பாடல் பாடி செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் அத்துடன் இந்தியாவில் விவசாயம் தொழில் செய்யும் அனைவருக்கும் வரியை ரத்து செய்ய வேண்டும் என பிரதமருக்கு தனியாக கடிதம் எழுத போவதாக தெரிவித்தார் டி.ஆர்

டி ஆர் திடீர் என திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி குறித்தும் காங்கிரஸ் கூட்டணி குறித்தும் விமர்சனம் செய்வதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுந்த சூழலில் அதற்கு காரணம் திரை துறையில் ஆளும் கட்சியின் தலையீடு தான் காரணம் என்று கூறப்படுகிறது, சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தினை வெளியிட தியேட்டர் ஒதுக்காதது.

அத்துடன் மாநாடு சாட்டிலைட் உரிமம் என நடந்த பஞ்சாயத்து, முதல்வர் வீட்டின் முன்பு போராட்டம் செய்த டி ஆர் மற்றும் அவரது மனைவி என பல பஞ்சாயத்துக்கள் மாநாடு திரைப்படம் மூலம் ஆளும் தரப்பிற்கும் சிம்பு குடும்பத்திற்கும் உண்டானதாக கூறப்படுகிறது அதன் வெளிப்பாடாகதான் டி.ஆர் மறைமுகமாக கருணாநிதி மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிலையை கூறியதாக கூறப்படுகிறது.