Cinema

டூப் போடும் நிலைக்கு சென்ற செந்தில்.. பரிதாப நிலையில் இருந்து மீழுவாரா?

Sen
Sen

ஒரு காலத்தில் முன்னணி 24 மணிநேர செய்தி தொலைக்காட்சியில் பணியாற்றியவர் செந்தில் என்ற செந்தில்வேல், இந்தியா-சீனா   ராணுவத்திற்கு இடையே ஏற்பட்ட மோதலை சர்ச்சைக்குரிய வகையில் விவரித்த காரணத்திற்காக மாரிதாஸ் வெளியிட்ட வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில்  பணியிலிருந்து தூக்கி அடிக்கப்பட்டார் செந்தில்.


நான் பணி செய்த இடத்திலிருந்து தன்னை சிலர் வெளியேற்ற காரணமாக இருந்ததாக  கண்ணீர் விட்டு கதறி வீடியோ வெளியிட்டார் செந்தில்,  அதன்பிறகு தான் புதிதாக யூடியூப் சேனல்  தொடங்க இருப்பதாகவும்  அதற்கு தமிழர்கள் ஆதரவு வேண்டும் எனவும் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார் செந்தில்.

  கண்ணீரை பார்த்த பல தமிழர்கள் அவரது சேனலை பின்பற்றத் தொடங்கினர் மேலும் காங்கிரஸ் திமுக விசிக போன்ற கட்சியை சேர்ந்த முன்னணி நபர்களும் அவரது சேனலை சப்ஸ்கிரைப் செய்யுமாறு தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர், ஒரு கட்டத்தில் தமிழ்தேசிய ஆதரவாளராக அறியப்பட்ட செந்தில் சிறிது காலத்திலேயே தீவிர திராவிட ஆதரவாளராக மாறினார்.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக வேட்பாளர்களுக்கு பிரச்சார முகமாகவும் செந்தில் மாறினார், தொடர்ந்து பாஜகவினை விமர்சனம் செய்து வந்தார் செந்தில், ஒருகட்டத்தில் செந்திலின் சேனலை பின்பற்றிய பலர் அதனை தொடர்ந்து பார்க்க மறுத்து வெளியேறினர்.

 தான் வெளியிட்ட வீடியோ மக்களிடையே  சென்றடையாத  காரணத்தினால் இப்போது செந்தில் புது முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

 தன்னைப்போலவே யூடியூப் சேனல் நடத்துகின்ற 4 புதுமுகங்களை சேர்த்துக்கொண்டு, டூ பார்ட்டிஸ் வேஷம் போட்டுக் கொண்டுள்ளார் செந்தில், அதாவது பாஜகவை சேர்ந்த சில தலைவர்களையும் இந்து மத ஆதரவாளர்களையும் டூப் செய்து, அவர்களை  போலவே நடித்து காட்டி வருகின்றனர் செந்தில்  மற்றும் அவரது குழுவினர்.

 கிட்டத்தட்ட   ஜூனியர் ஆர்டிஸ்ட் லெவலுக்கு தரைமட்டத்தில் இறங்கியுள்ளார் செந்தில், 24 மணி நேர செய்தி தொலைக்காட்சியில் முன்னணி ஊடக விவாதத்தில் பங்கேற்ற செந்தில் தற்போது ஜூனியர் ஆர்டிஸ்ட் லெவலிர்க்கு இறங்கியிருப்பது மிகவும் பரிதாபத்துக்குரிய செய்தியாக பார்க்கப்படுகிறது.

இதே நிலையில்  செந்தில் சென்றால் விரைவில் சின்னத்திரை நாடகத்தில் அல்லது கலைஞர் டிவியிலோ  ஜூனியர் ஆர்டிஸ்ட்  வேஷம் போட்டு நடிப்பதற்கான பத்துப் பொருத்தங்களும் பக்காவாக இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர், தன்னுடைய தொழிலில் நேர்மையாக இருந்தால் இதுபோன்ற நிலையை செந்தில் அடைய தேவை இருக்காது எனவும், தற்போதைய ஆளும் கட்சிக்கு ஆதரவாக தீவிர பரப்புரையை சேர்ந்து மேற்கொண்டதே செந்திலின் இந்த ஜூனியர் ஆர்டிஸ்ட் நிலைமை காரணமாக பார்க்கப்படுகிறது.

 செந்தில் அயன் கார்த்திகேயன் என்பவரையும் கூடவே இரு சிறு ஜூனியர் ஆர்டிஸ்ட் களையும் சேர்த்துக்கொண்டு வெளியிடும் வீடியோக்கள் இணையத்தில் நகைச்சுவையை  உண்டாக்கி உள்ளன.