24 special

முடிவுக்கு வந்த செங்கோட்டையனின் அரசியல் தேவை வெளுத்தது விஜயின் அரசியல் நடிப்பு எம்.ஜி.ஆர் வேடம் ஜெயலலிதா படம் அகற்றம்

VIJAY,SENGOTTAIYAN
VIJAY,SENGOTTAIYAN

தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த பிறகு தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் நகர்வுகள் மிக வேகமாக பச்சோந்தி தனமாக மாறி வருகிறது என்பதே . அரசியல் வட்டாரங்களில் ஹாட் டாபிக்.  புதிய அமைச்சரவையின் முன்னுரிமைப் பட்டியலில் புஸ்ஸி ஆனந்த் இரண்டாவது இடத்திலும், ஆதவ் அர்ஜுனா மூன்றாவது இடத்திலும் உள்ளனர். ஆனால், அரசியல் சீனியர் செங்கோட்டையன் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


ஏற்கனவே அவரிடம் இருந்த முக்கிய அமைச்சகம் மாற்றப்பட்டது. அவருக்கு வருவாய்த் துறை வழங்கப்பட்டது. அவரது செல்வாக்கு குறைக்கப்பட்டதற்கான முதல் அறிகுறியாகவே பலர் இதைப் பார்த்தனர். அதிமுகவில் இருந்து முக்கிய தலைவர்களைத் இழுக்க செங்கோட்டையன் பயன்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த அரசியல் தேவை முடிந்துவிட்டது. , ஆதவ் அர்ஜுனா மற்றும் லீமா ரோஸ் மூலம் அதிமுகவுக்குள் பிளவுகள் உருவாக்கப்பட்டுவிட்டன. எனவே, இனி செங்கோட்டையன் இல்லாமல் கூட அதிமுகவை பலவீனப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை ஆளும் தரப்பில் உருவாகியுள்ளது. அதனால்தான், ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே செங்கோட்டையனை ஓரங்கட்டும் முயற்சி தொடங்கிவிட்டதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அமைச்சரவை விரிவாக்கத்திற்கு முன்பு, அதிமுகவைச் சேர்ந்த சுமார் 25 எம்.எல்.ஏ.க்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தார்கள் . ஆனால், செங்கோட்டையனின் தற்போதைய நிலையைப் பார்த்த பிறகு அவர்கள் பின்வாங்கினர். அந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணியை நோக்கி சென்றனர். இன்று செங்கோட்டையனுக்கு ஏற்பட்ட நிலை, நாளை தங்களுக்கும் ஏற்படலாம் என்ற அச்சம் அவர்களிடம் உருவாகியுள்ளது.

இதற்கிடையில், முதல்வர் விஜய் மீது மற்றொரு விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. அவர் “எம்.ஜி.ஆரின் வழி, எம்.ஜி.ஆரின் அரசியல்” என்று தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் இதுவரை அவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தவில்லை. பெரியார் நினைவிடத்திற்குச் சென்றவர், எம்.ஜி.ஆர் பெயரை மேடைகளில் மட்டும் பயன்படுத்திவிட்டு, நினைவிடத்திற்குச் செல்லாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

மேலும், அம்மா உணவகங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக முதல்வர் விஜயின் புகைப்படங்கள் வைக்கப்பட்டது. இது அதிமுக ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையெல்லாம் பார்க்கும்போது, ஆட்சியைப் பிடிப்பதற்காக அதிமுகவின் மரபு, எம்.ஜி.ஆர் பெயர், ஜெயலலிதா பாரம்பரியம் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாகத் தோன்றுகிறது. செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்களின் செல்வாக்கும் பயன்படுத்தப்பட்டது. ஆனால், அதிகாரம் கைக்கு வந்த பிறகு அதே தலைவர்களும் அடையாளங்களும் மெதுவாக ஓரங்கட்டப்படுகிறார்களா என்ற சந்தேகம் தொண்டர்கள் மத்தியில் வலுத்து வருகிறது. வரவிருக்கும் மாதங்களில் இந்த அதிருப்தி மேலும் பெரிதாகுமா அல்லது தமிழக வெற்றி கழகம் இதைச் சமாளிக்குமா என்பதே தமிழக அரசியலின் அடுத்த பெரிய கேள்வி.