Cinema

நீண்ட நாள் கழித்து ரஜினி பற்றிய உண்மையை போட்டு உடைத்த சரத்குமார்

sarathukumar, rajinikanth
sarathukumar, rajinikanth

பெங்களூரில் போக்குவரத்து கழகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் 1970களில் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து அங்கு பட்டம் பெற்று அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய ஒருவர் தற்பொழுது தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஆக அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட ஒரு தலைவராகவும் திகழ்ந்து வருகிறார் ரஜினிகாந்த்! இவர் ஆரம்பத்தில் நடித்து சில படங்களில் எதிர்க்கதாபாத்திரத்திலேயே நடித்து வந்தார் அந்த எதிர் கதாபாத்திரத்திலும் தனக்கென்று தனி ஒரு ஸ்டைலையும் நடிப்பையும் கொடுத்து பல ரசிகர்களை தன் பக்கம் திருப்ப ஆரம்பித்தவர். அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, 16 வயதிலேயே போன்ற படங்களில் வில்லனாக நடித்து வந்த சூப்பர் ஸ்டார் புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற திரைப்படங்களில் நல்லவனாகவும் நடிக்க ஆரம்பித்தார் அதற்கு பிறகு பில்லா, போக்கிரி, முரட்டுக்காளை, ராஜா போன்ற படங்களில் அதிரடி நாயகன் என்ற பெயரையும் பெற்றார் பிறகு தில்லுமுல்லு என்ற படத்தின் மூலம் தன்னிடம் இருந்த நகைச்சுவை பக்கத்தையும் மக்களுக்கு காண்பித்து ஒரு நகைச்சுவை விருந்தளித்தார். 


சமீபத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது இதன் மூலம் மீண்டும் வசூல் மன்னன் என்ற ஒரு பட்டத்தை சூப்பர் ஸ்டாரே பெற்றார். எப்படி சூப்பர் ஸ்டார் தன் சினிமா திரைப்படத்தில் முதல் மூன்று படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானாரோ அதேபோன்று திரை உலகில் 90களில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்தவர் சரத்குமார். சூப்பர் ஸ்டார் போன்று சரத்குமார் தன் முதல் சில படங்களில் வில்லனாக நடித்து தமிழக மக்களை மிரட்டினார், அதற்குப் பிறகு சில படங்களில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார் இருப்பினும் சூரிய வம்சம், நாட்டாமை, கம்பீரம், ஐயா மற்றும் ரகசிய போலீஸ் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. சமீபத்தில் கூட பல படங்களில் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்தி வருகிறார், அப்படி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். அதோடு தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் தற்பொழுது பிரபலமாக நடித்து வருகிறார் சரத்குமார்.  பண்டாரா, பகவத் கேசரி, போர் தொழில், பரம்பொருள், கிறுக்கன், ரங்கபாலி மற்றும் கஸ்டடி, ருத்ரன் ஆகிய படங்களும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் சோழர்களின் வரலாற்றை பிரதிபலிக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சரத்குமார். இப்படி 70களில் இருந்து தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் 90களில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வரும் சரத்குமாரும் சேர்ந்து நடித்தால் எப்படி இருக்கும் இதுவரை அவர்கள் நடிக்கவில்லையே என்று யோசித்துப் பார்த்தால் அதற்கு பதில் அளிக்கும் வகையில் சரத்குமார் கலந்துகொண்ட நேர்காணலில் சரத்குமார் கூறியது திரை ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை கிளப்பி உள்ளது. அதாவது " ரஜினி சாரே என்னை அழைத்து இருவரும் சேர்ந்து படம் பண்ணுவோம் என்று கூறினார் மேலும் அந்த கதையை ரஜினி சாரே எழுதி அந்த கதை முழுவதும் என்னிடம் விளக்கினார். கதை மிகவும் சூப்பராக வந்திருந்தது சுரேஷ் கிருஷ்ணாவை வைத்து தான் படம் எடுக்கலாம் என்று நினைத்திருந்தோம் ஆனால் ஏதோ ஒரு காரணத்தில் அது ஒர்க் அவுட் ஆகாமல் போய்விட்டது" என்று சரத்குமார் கூறினார். மேலும் அவர் அந்த பேட்டியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்படி தன்னிடம் கதை கூறினார் என்பதையும் விளக்கி தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.