
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருவதோடு, உலகளாவிய கடல்சார் வர்த்தகப் பாதைகளில் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வல்லமையை மெய்ப்பித்துக் காட்டி வருகிறது. சமீபத்தில் 15,400 டன் எடையுள்ள சமையல் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு 'கிரீன் ஆஷா' (GREEN ASHA) என்ற இந்தியக் கப்பல், உலகின் மிகவும் பதற்றமான மற்றும் சவாலான பாதையாகக் கருதப்படும் ஹார்மூஸ் நீரிணையை எவ்விதத் தடையுமின்றி கடந்து மும்பை நவி துறைமுகத்தை வந்தடைந்தது ஒரு சாதாரண நிகழ்வல்ல; இது இந்தியாவின் வளர்ந்து வரும் கடற்படை வலிமைக்கும், சர்வதேச அரங்கில் இந்தியா பெற்றுள்ள நன்மதிப்பிற்கும் ஒரு சிறந்த சான்றாகும்.
முன்பெல்லாம் இந்தியக் கப்பல்களுக்கு அச்சுறுத்தல் என்றால் உலக நாடுகளை எதிர்பார்க்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழ்.ஆப்ரிக்கக் கடற்கரை மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் இந்தியக் கப்பல்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போதெல்லாம் இந்தியக் கடற்படை மின்னல் வேகத்தில் செயல்பட்டுள்ளது. உதாரணமாக, 'எம்.வி. லீலா நோர்போக்' (MV Lila Norfolk) என்ற கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்த முயன்றபோது, இந்தியக் கடற்படையின் மார்கோஸ் கமாண்டோக்கள் நடத்திய துணிச்சலான மீட்பு நடவடிக்கை உலக அளவில் பேசப்பட்டது. அதேபோல் 'எம்.வி. கெம் புளூட்டோ' (MV Chem Pluto) போன்ற கப்பல்கள் மீதான தாக்குதல் முயற்சிகளின்போது, இந்தியப் போர்க்கப்பல்கள் உடனடியாக பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி அவற்றுக்கு அரணாக நின்றன.
ஏடன் வளைகுடா முதல் பாரசீக வளைகுடா வரை இந்தியப் போர்க்கப்பல்கள் அரணாக நிற்க, "எவன் தடுப்பான் இந்தியக் கப்பலை?" என சவால் விடும் வகையில் மோடி அரசின் பாதுகாப்பு வியூகம் அமைந்துள்ளது. செங்கடல் பகுதியில் பெரும் வல்லரசுகளே திணறும் போது, இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் கம்பீரமாகப் பயணிப்பது இந்தியாவின் அசுர வளர்ச்சியைப் பறைசாற்றுகிறது. இது வெறும் பேச்சு அல்ல, இந்தியக் கடற்படையின் பலம் மற்றும் மத்திய அரசின் துணிச்சலான ராஜதந்திரத்திற்குச் சான்று. தடுத்து பாருங்கடா... இது இந்தியாவின் ஆதிக்கம்!
இந்தியக் கப்பல்களின் மீது கை வைப்பது என்பது அசுர பலம் கொண்ட இந்தியப் பாதுகாப்புப் படைகளுடன் மோதலுக்குத் தயாராவதாகும் என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லும் விதமாக 'கிரீன் ஆஷா' கப்பலின் வருகை அமைந்துள்ளது. இது தற்சார்பு இந்தியா மற்றும் பாதுகாப்பான இந்தியா என்ற கொள்கையின் கீழ் கடல்வழி வணிகத்தில் இந்தியா அடைந்து வரும் மாபெரும் முன்னேற்றத்தின் அடையாளம் ஆகும்.
