Cinema

நடிகர் மாதவன் நடித்த ராக்கெட்டரி திரைப்படம் உண்மையில் வேற லெவல்! அதிலும் அந்த வசனம்!

Rocketey movie
Rocketey movie

நடிகர் மாதவன் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான ராக்கெட்டரி திரைப்படம் குறித்து சமூக வலைத்தளத்தில் வாசகர் ஒருவர் எழுதிய விமர்சனம் வைரலாகி வருகிறது அது குறித்து பார்க்கலாம்.


நடிகர் மாதவன் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய திரைப்படம் ராக்கெட்டரி  இதில்  நாலு வெற்றி மாறன், நாலு பாலசந்தர், நாலு பாலு மகேந்திரா, நாலு பாரதிராஜா, நாலு மணிரத்னத்தைக் குலுக்கிப் போட்டு எடுத்த அற்புத கலவை இயக்குநர் மாதவன். வலி, துக்கம், சந்தோஷம், வேதனை, கண்ணீர் என அத்தனை உணர்வுகளையும் ஒவ்வொரு பிரேமிலும் சொல்லத் தெரிந்திருக்கிறது.

இரண்டரை மணி நேரம் நான் படம் பார்க்கவில்லை. நம்பி நாராயணன் வாழ்க்கையை omni presence இல் கூடவே இருந்தது போன்ற உணர்வு. எடிட்டிங் சூப்பர் என்றால், அதை விட சூப்பர் கேமிரா.வசனங்கள் அத்தனை கூர்மை.

'ஒரு நாயைக் கொல்லணும்ன்னா அதை வெறிநாய்ன்னு சொன்னாப் போதும், ஊரே அடிச்சுக் கொன்னுடும். ஒருத்தன் பெயரைக் கெடுக்கணும்ன்னா அவனை 'தேசத் துரோகி'ன்னு முத்திரை குத்திட்டாப் போதும். ஒரு நாடே சேர்ந்து அவனைக் கொன்னுடும்!' வாவ்...

படத்தில் இளமைக்கால விக்ரம் சாராபாய், கலாம், சதீஷ் தவான் ஆகியோரும் வந்து போகிறார்கள். அது போன்றக் காட்சிகளை இதுவரை யாரும் பார்த்திர முடியாதது. அதே போல கேமியோ செய்துள்ள சூர்யா நிஜமாகவே க்ளிசரின் இன்றி அழுது, நம்மையும் அழ வைக்கிறார்.

இந்தப் படம் ஆஸ்காருக்குள் மினிமம் நாலு கேட்டகிரியில் நுழைய வாய்ப்புள்ளது.இந்தப் படம் கமர்சியலாக வெற்றி பெற்றால் மாதவனோடு சேர்ந்து என்னைப் போல பலரும் சந்தோஷப் படலாம். ஒரு வேளை தோற்றால், இந்தத்  தோல்வி ஒவ்வொரு இந்தியனையும் சாரும்.

படத்தில் பஞ்சாங்கம், பூணூல்,  ஐயர், பார்ப்பனன், ஆரியன், ஜாதி, மதம் என வருமா என்று பார்த்தவர்களுக்கு வருத்தமாக இருந்திருக்கும். கண்ணில் விளக்கெண்ணெய் போட்டுத் தேடினாலும் கிடைக்காது!

இந்தப் படத்தை தியேட்டரில் பாருங்கள். பெரிய திரை, டால்பி ஸ்டீரியோ, அட்மோஸ் 4k projection இல் ஜொலிக்கிறது.உங்கள் குழந்தைகளை மறக்காமல் கூட்டிச் செல்லவும் என குறிப்பிட்டுள்ளார்.