24 special

காங்கிரஸ் நிர்வாகிகளிடையே அதிருப்தியை சம்பாதிக்கும் ராகுல்..

MKSTALIN, PMMODI
MKSTALIN, PMMODI

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி வரை லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதில் முதல் இரண்டு கட்டங்கள் சமீபத்தில் முடிந்துள்ள நிலையில் அஸ்ஸாம், பீகார் , குஜராத், ஜம்மு மற்றும் காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட இன்னும் சில மாநிலங்களில் வருகின்ற மே 7ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது ஏற்கனவே முதல் இரண்டு கட்டங்களில் தமிழக மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் லோக்சபா தேர்தல் பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றதும் வாக்குப்பதிவுகள் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி மற்றும் 26 ஆம் தேதி நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாகவே வெளியான பல தேர்தல் சர்வேயிலும் மீண்டும் மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடிக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக ஆட்சி பொறுப்பை ஏற்பார் என்ற வகையிலும் முடிவுகள் கிடைத்தது திமுக மற்றும் இண்டி கூட்டணி கட்சிகளை பெரும் அதிருப்தியில் தள்ளியது. 


அதுமட்டுமின்றி கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவும் காங்கிரசும் கைகோர்த்து தமிழக மக்களை குறிப்பாக மீனவ சமுதாயத்தை படுகுழியில் தள்ளி உள்ளது வெளியானது தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரசுக்கு பெரும்பின்னடைவாக பார்க்கப்பட்டது! அதுமட்டுமின்றி தமிழகத்தில் திமுக கடந்த மூன்று ஆண்டுகளாக செய்த ஆட்சியில் தமிழக மக்கள் அனைவரும் கடும் கோபத்தை தேர்தல் வருவதற்காக காத்துக் கொண்டிருந்ததும் தேர்தலுக்கு முன்பாக திமுக தரப்பில் பிரச்சாரங்களை மேற்கொள்ள திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தொகுதி பக்கம் சென்ற பொழுது மக்கள் தங்கள் கோபக்கனல்களை அவர்கள் மீது வீசியதும் செய்திகளின் பரபரப்பாக வெளியானது. இதனால் கடந்த தேர்தலில் 39 தொகுதிகளிலும் தனக்கு சாதகமான முடிவை பெறுவது சாத்தியம் இல்லை எனவும்  சற்று கடினம் என்றும் ஆனால் முன்பு நடந்த தேர்தல்களை விட தற்போது பாஜகவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயர்ந்துள்ளதும் அதனால் இந்த தேர்தலில் பாஜகவின் எம்பிகள் தமிழகத்தில் நிச்சயம் பல இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்பதும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவது மட்டுமின்றி பல தேர்தல் நிபுணர்களின் கணிப்பாகவும் உள்ளது.

ஆகவே தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் சற்று தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதனால் அடுத்து நடைபெற உள்ள தேர்தல்களில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் படு தீவிரமாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது அந்த வகையில் உத்தரபிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ராகுல் காந்தியிடம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் பொழுதே தங்களுக்கு அழைப்பு விடப்பட்டது ஆனால் காங்கிரஸ் தரப்பில் அதை மறுத்து விட்டீர்கள் அதனால் தற்போது அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வாருங்கள் என்று கோரிக்கையை முன் வைத்துள்ளனர் ஆனால் அதற்கும் ராகுல் அப்பொழுது வரவில்லை இப்பொழுது மட்டும் சென்றால் நாம் வாக்குக்காக தான் வருகிறோம் என்பது அப்பட்டமாக தெரிந்துவிடும் அதனால் அயோத்திக்கு தற்போது வரப்போவதில்லை என்ற பதிலை கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. 

மேலும் ராகுலின் இந்த பதில் உத்திரபிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது, இதே அதிருப்தி காரணமாகவே பல காங்கிரசின் முக்கிய மற்றும் மூத்த நிர்வாகிகளாக இருந்த பலர் காங்கிரசை விட்டு வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சனாதன பேச்சால் உதயநிதிக்கு எந்த ஒரு தண்டனையையும் கண்டிப்பையும் வழங்காத காங்கிரஸ் மீது காங்கிரஸ் நிர்வாகிகளே அதிருப்தியில் ஆழ்ந்துள்ள நிலையில் தற்போது அயோத்தி ராமரை தரிசிக்கப் போவதில்லை என்று ராகுல் கூறி உள்ளதும் உத்திரபிரதேசத்தில் மேலும் காங்கிரஸின் பலவீனத்தை உறுதிப்படுத்தி உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் விமர்சிக்கப்படுகிறது.