24 special

அஷ்வினுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர்... உதயநிதி ஸ்டாலின் எங்கே போனார்..?

Ashwin, Pm Modi
Ashwin, Pm Modi

இந்தியாவில் அதிகம் விரும்பி பார்க்க கூடிய போட்டியான கிரிக்கெட் போட்டி, இந்த போட்டி மூலம் இளைஞர்கள் சாதித்து கிரிக்கெட் போட்டிக்கு தேர்வாகி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் அபாரமான சாதனை படைத்தார். அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால், தமிழகத்தில் விளையாட்டு துறைக்கு போர் கொடி பிடிக்கும் நபர் ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என கேள்வி எழுந்துள்ளது.


இங்கிலாந்து அணிக்கு எதிரான ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜாக் கிராலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 500 விக்கெட் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் எட்டினார். இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 500 விக்கெட் எடுத்த இரண்டாவது வீரர் அஷ்வின் ஆவார். முதல் இடத்தில அணில் கும்ப்ளே இருந்து வருகிறார். அந்த வகையில் பிரதமர் மோடி, அஸ்வினுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய அசாதாரண மைல்கல்லை எட்டிய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்துகள். அவரது பயணம் மற்றும் சாதனைகள் அவரது திறமை, விடாமுயற்சிக்கு சான்றாகும். அவர் மேலும் பல சாதனைகளை படைக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார். இணையத்தில் அஷ்வினுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவிக்காதது அவர் மீது விமர்சனமாக எழுந்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தனது இணையத்தில் அஷ்வினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். கடந்த வருடம் அமைச்சர் பதவி உதயநிதிக்கு வந்ததில் இருந்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் அருகில் வைத்துக்கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மற்றும் விளையாட்டு துறையில் தான் இருப்பதை காட்டவே அஷ்வினை கூடவே வைத்து கொண்டு இளைஞர்களை சந்தித்து வந்தார்.

சென்னையில் உள்ள பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு  விளையாட்டில் ஊக்கம் அளிப்பதற்காக கால்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கான பயிற்சிக்கூடத்தினை முதலமைச்சர் துவக்கி வைத்தார். இவ்விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் கலந்து கொண்டார்.அதில் பேசிய உதயநிதி, “இத்திட்டம் துவங்கப்பட்டதற்கு முதலில் அஸ்வினுக்கு நன்றி. ஏனென்றால், அவர் தான் இத்திட்டத்தின் துவக்கம். அவர் இல்லையென்றால் இத்திட்டம் உருவாகியிருக்காது. பல வருடங்களாக அவர் முயன்றுள்ளார். அது இந்த வருடம் செயல்படுத்தப்பட்டுள்ளது" என்று அஷ்வினை வைத்து கொண்டு நல்லா விளம்பரத்தை தேடுகிறார் உதயநிதி என விமர்சனம் வந்தது.

அப்படி அஷ்வினை புகழாரம் சுட்டி வந்த உதயநிதி தற்போது, அஷ்வின் மிக பெரிய சாதனை செய்ததை உதயநிதி ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் இருப்பதாக ஒரு விமர்சனம் வருகிறது. அஷ்வினை வைத்து ரோல் மாடலாக பள்ளி மாணவர்களிடம் பேசி வந்த உத்யானித்து இந்த சாதனையை ஏன் வெளியில் சொல்லவில்லை என கேள்வி எழுந்துள்ளது. இதற்கு அரசியல் விமர்சகர்களோ படம் வெளியாகி எதாவது சாதனை புரிந்தால் நிச்சயம் இணையத்திலோ அல்லது தொலைபேசியிலோ அழைத்து வாழ்த்து தெரிவித்திருப்பார் என கூறுகின்றனர். ஒரு வேலை இந்த சாதனை நமது விளையாட்டு துறை அமைச்சருக்கு தெரியாமல் இருக்கும் அரசியலில் பிசியாக இருந்திருப்பார் என கூறப்படுகிறது. இந்திய பாகிஸ்தான் போட்டியின் போது ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் போட்டதற்கு விளையாட்டை விளையாட்டாக பாருங்கள் என கூறியவர் உதயநிதி என்பது குறிப்பிடத்தக்கது.