அடுத்த போராட்டத்திற்கு தயாராகிறது பாஜக இந்த முறை ஸ்டாலினின் அடிமடியில் கைவைக்கிறது!tnbjp
tnbjp

திமுக அரசாங்கம் திட்டமிட்டு இந்து ஆலயங்களில் மக்கள் வழிபடுவதை தடுக்கும் விதமாக வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கோவிலை திறக்க தடை விதித்து இருக்கிறது, உடனடியாக கோவிலை திறக்கவேண்டும், 10 நாட்களுக்குள் கோவிலை திறக்கவில்லை என்றால் மிக பெரிய அளவில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இதையடுத்து கோவில் திறக்க வாய்ப்பே இல்லை என கூறிவந்த அமைச்சர் சேகர்பாபு இன்று மக்களின் கோரிக்கையை ஏற்று கோவில்களை அனைத்து நாட்களிலும் திறக்க அனுமதி அளித்து இருப்பதாக தெரிவித்துள்ளார் இப்படி தான் எடுத்த முதல் போராட்டத்தில் வெற்றி பெற்ற பாஜக அடுத்து முதல்வர் ஸ்டாலினின் அடிமடியில் கைவைக்க இருக்கிறதாம்.

இதுகுறித்து பாஜக பிரமுகர் வீரதிருநாவுக்கரசு குறிப்பிட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு :- #ஸ்டாலின்மீதுவழக்கு பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பலவும் ஆயுதபூஜை & சரஸ்வதிபூஜை வாழ்த்துச் சொல்லியிருக்கின்றன. திமுக வழக்கம்போல வாழ்த்துச் சொல்லவில்லை. இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட மற்ற மதங்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லும் திமுக, இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துச் சொல்வதில்லை.

இதுதான் மதசார்பின்மையா? திமுக என்கிற அரசியல் கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் இந்துக்களின் மத உணர்வுகளை மதிக்காமல் இருப்பதே விமர்சனத்திற்கும் கண்டணத்திற்கும் உரியது. அதைவிட பல மடங்கு கண்டணத்திற்குரியது தமிழக முதல்வராக இருக்கும் ஸ்டாலின் , இந்துக்களின் மத உணர்வுகளை மதிக்காமல் இருப்பது! 

லட்சக்கணக்கான இந்துக்களின் வாக்குகளைப் பெற்றுத் தானே முதல்வரானார் ஸ்டாலின்? அந்த இந்துக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் தானே?இந்துக்களின் ஓட்டு இனிக்கிறது,உணர்வு கசக்கிறதா?மதசார்பற்ற அரசியல் சட்டத்தின் அடிப்படையில் இயங்குகிற ஒரு மாநில முதல்வர், மற்ற எல்லா மதங்களின் பண்டிகைகளுக்கும் வாழ்த்துச் சொல்லிவிட்டு,

இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துச் சொல்லாமல் இருப்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை மீறியச் செயல் என்றே கருதுகிறேன். ஆகவே, தமிழக முதல்வர் மீது வழக்குத் தொடுக்க முடியுமா? என அரசியலமைப்புச் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்துக்கொண்டிருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். அதாவது இந்து பண்டிகைகளுக்கு எந்த ஆண்டும் திமுக தலைவர்கள் வாழ்த்து சொல்லியது இல்லை இருப்பினும் முன்பெல்லாம் மக்கள் அதனை பெரிதாக எடுத்து கொள்வது இல்லை.

ஆனால் சமூகவலைத்தளங்கள் பெருகியுள்ள இந்த காலத்தில் ஏன் திமுக இந்து பண்டிகையை மட்டும் குறிவைத்து வாழ்த்து சொல்வது இல்லை என்ற கேள்வியை எழுப்பியுள்ளது, இதை பாஜக நீதிமன்றம் மூலமாகவும், போராட்ட வடிவிலும் மக்களிடத்தில் கொண்டு சென்றால் அது விவாதமாக மாறி பலரை சென்று அடையும் ஒரு வேலை ஸ்டாலின் அப்போதும் வாழ்த்து சொல்லவில்லை என்றால் முழுக்க முழுக்க இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக என்ற பிம்பம் அதிகரிக்கும் என்பதால் இந்த வழியில் பாஜக செல்லும் என கூறப்படுகிறது.

ஆயுதபூஜைக்கு வாழ்த்து சொல்லாத ஸ்டாலின் அடுத்த மாதம் வர இருக்கும் தீபாவளி பண்டிகைக்கும் வாழ்த்து சொல்லவில்லை என்றால் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது, ஒரு வேலை கோவிலை 10 நாட்களில் திறக்கவேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்து தற்போது சாதித்து காட்டியது போல் அதற்கும் ஒரு எச்சரிக்கை கொடுக்கப்பட்டு வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

Share at :

Recent posts

View all posts

Reach out