24 special

மீண்டும்... மீண்டும்...இந்தியாவிடம் மண்டியிட்ட பாகிஸ்தான்! நாடு என்ன எதிர்பார்த்ததோ அது நடந்தது!


இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான போர் பதற்றம் தணிந்துள்ளது. இந்தியா அடித்த அடியில் சுக்குநூறாகி உள்ளது பாகிஸ்தான் மேலும் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத தளங்கள், 21 பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது துல்லியமான ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தி அவற்றை முற்றிலுமாக தரைமட்டமாக்கியது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.மேலும் 60க்கும் மேற்ப்பட்ட ராணுவ வீரர்களை இழந்தது பாகிஸ்தன். ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் விமானப்படையின் 8 F16 ரக விமானங்கள், 4 JF-17 ரக விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் இந்தியா தாக்குதலால்  பாகிஸ்தானுக்கு 30 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது



நம் நாட்டின் அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் நிலைக்குலைந்து போனது. அதுமட்டுமின்றி பாகிஸ்தான் நம்மை தாக்க முயன்ற நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டன. இதனால் வேறு வழியின்றி பாகிஸ்தான் நம்மிடம் சரணடைந்தது. மோதலை கைவிட வேண்டும். நாங்கள் இனி தாக்கமாட்டோம் என்று மண்டியிட்டது 


பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு பாகிஸ்தானுக்கு கொடுக்கும் சிந்து நதி நீரை தடுத்து வைத்துள்ளது. இந்த முடிவில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பாகிஸ்தானை எடுத்து கொண்டால் சிந்து நதி நீர் என்பது மிகவும் முக்கியம். அங்கு பொருளாதாரத்திற்கு சிந்து நதி நீர் தான் முக்கியமானதாக உள்ளது. தற்போது இருநாடுகள் இடையேயான பேச்சுவார்த்தையில் சண்டை முடிவுக்கு வந்ததால் சிந்து நிதி நீரை பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டும் என்று அந்த நாட்டு தலைவர்கள் கெஞ்சி வருகின்றனர்.


ஆனால் நம் நாடோ சிந்து நதி நீரை நிறுத்தியது நிறுத்தியது தான். பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்தினால் சிந்து நதி நீர் பற்றி யோசிக்கலாம் என்று கறாராக தெரிவித்துவிட்டது. அதுமட்டுமின்றி தற்போதைய சூழலில் பேச்சுவார்த்தை என்பது பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வெளிப்படையாக தெரிவித்து விட்டார்.


இருப்பினும் கூட க இருநாடுகள் இடையேயான பிரச்சனையை பேசி தீர்த்து கொள்ளலாம். இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். நம் நாட்டுடன் பேச்சுவார்த்தையை நடத்தி சிந்து நதி நீரை பெற்று விட வேண்டும் என்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது. இது கடினமான விஷயம் தான் என்றாலும் கூட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அதனை விரும்புகிறார். ஆனால் நம் நாடு பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை.


இந்நிலையில் தான் நம் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் கெஞ்சி வருகிறது. இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், ‛‛இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். காஷ்மீர், தண்ணீர், வர்த்தகம் மற்றும் பயங்கரவாத ஒழிப்பு தொடர்பாக பேச தயார். இந்த பேச்சுவார்த்தைக்கு சீனாவை வைக்க வேண்டாம். சவுதி அரேபியா என்பது இருநாடுகள் இடையேயான பேச்சுவார்த்தைக்கு சரியான இடமாக இருக்கும்'' என்று கூறியுள்ளார்.