24 special

நேரடியாக ஜெய்சங்கர் போட்ட போடு! டிரம்பின் முகத்திரை கிழித்து தொங்கவிட்ட வாத்தி ! அடுத்தடுத்து இறங்கிய ஆப்பு!


இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை அமெரிக்கா தான் நிறுத்தியது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் இதனை இந்தியா காதிலே வாங்கி கொள்ளவில்லை. அமெரிக்காவின் கருத்தை மொத்தமாக  புறம்தள்ளி வருகிறது. இந்நிலையில் தான் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு எதுவும் இல்லை. இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் எப்படி நடந்தது? என்பது பற்றி நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பரபரப்பான விளக்கத்தை அளித்துள்ளார்.



இது ஒருபுறம் என்றால் ஆப்ரேஷன் சிந்தூர் விவகாரத்தில் மத்திய அரசுக்கும், முப்படைகளுக்கும் கிடைத்த வெற்றியை, கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் இரட்டை குடியுரிமை விவகாரத்தில் சிக்கி இருக்கும் ராகுல் காந்தி, தவறான புரிதலுடன், தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராகுலின் இந்த செயல்பாடு, பாகிஸ்தானின் எதிர்க்கட்சித் தலைவருக்கு இணையாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.


இந்நிலையில் தான் பாகிஸ்தான் - இந்தியா இடையேயான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு எதுவும் இல்லை. உண்மையில் என்ன நடந்தது என்று நம் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக நெதர்லாந்தை அடிப்படையாக கொண்ட ஊடகத்துக்கு ஜெய்சங்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது: பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அந்த நாட்டின் கொள்கையாக வைத்துள்ளது. இதுதொடர்பாக இந்தியா பலமுறை கவலை தெரிவித்துள்ளது. அதேபோல் பாகிஸ்தானின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 26 அப்பாவிகளை கொன்றனர்.


இவர்களில் பெரும்பாலானவர்கள் சுற்றுலா பயணிகள். அப்பாவிகள். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்து மதத்தில் நம்பிக்கை கொண்டவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர். பாகிஸ்தானின் தலைமை குறிப்பாக ராணுவ தளபதி மத கண்ணோட்டத்துடன் செயல்பட்டு வருகிறார். அவர் மதத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்களால் வழிநடத்தப்பட்டு வருகிறார்.


ஏப்ரல் 22ம் தேதி நடந்தது போன்ற தாக்குதல் நடக்கும் பட்சத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடரும் என்ற மெசேஜை உறுதியாக சொல்கிறோம். இந்த ஆபரேஷன் நடவடிக்கை என்பது பயங்கரவாதிகளை குறிவைத்து தான் இருக்கும். பாகிஸ்தான் பயங்கரவாதிகளை அரவணைத்தால் நாங்கள் அவர்களை தாக்குவோம்.


ஆபரேஷன் நடவடிக்கை என்பது இன்னும் முடியவில்லை. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் கொள்கைகள் இன்னும் அப்படியே உள்ளது. ராணுவ நடவடிக்கைகள் தான் நிறுத்தப்பட்டுள்ளது. இப்போது இருநாடுகள் இடையே ராணுவ ரீதயிலான மோதல் நிறுத்த ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அபரேஷன் அப்படியே உள்ளது. மோதலை நிறுத்த பாகிஸ்தான் தான் எங்களுக்கு மெசேஜ் அனுப்பியது. நாங்கள் தாக்குதலை நிறுத்துகிறோம் என்று கூறினர். இதனால் நாங்கள் அதற்கு ஒப்புக்கொண்டோம்'' என்று கூறினார்.


இந்த வேளையில் ‛‛அமெரிக்கா தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறுகிறாரே? அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உங்களை தொடர்பு கொண்ட பிறகு தான் போர் நின்றதாக கூறுகிறாரே?'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.


அதற்கு ஜெய்சங்கர், ‛‛நாங்கள் ஒன்றை உறுதியாக சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். எங்களுடன் அமெரிக்கா மட்டுமின்றி நிறைய பேர் பேசினார்கள். அவர்களிடம் நாங்கள் கூறியது ஒன்று தான். பாகிஸ்தான் மோதலை நிறுத்த விரும்பினால் அதனை எங்களிடம் நேரடியாக கூற வேண்டும் என்று தெரிவித்தோம். அதன்பிறகு பாகிஸ்தான் ஜெனரல் எங்களின் ஜெனரலை அழைத்து தாக்குதலை நிறுத்துவதாக கூறினார். இந்த மோதல் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் - இந்தியா இடையேயான பேச்சுத்தான் காரணம். 3வது நபரின் தலையீடு என்பது இல்லை'' என்று உறுதியாகி கூறியுள்ளார்