
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போ் வெடித்தது. கடந்த மே 7 ம் தேதி அதிகாலையில் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலமாக நம் நாடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. நம் நாட்டில் இருந்து ஏவுகணைகள், வெடிகுண்டுகள் பாகிஸ்தானில் அடுத்தடுத்து விழுந்து வெடித்தன. மொத்தம் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. அதன்பிறகு மே 10ம் தேதி காலையில் பாகிஸ்தானின் விமானப்படை தளம், ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தப்ட்டது. நம் படைகளின் அடியை தாங்க முடியாத பாகிஸ்தான் நம்மிடம் சரணடைந்தது. போரை நிறுத்தும்டி கெஞ்சியது. இதனால் 4 நாட்களில் இந்தியா-பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்தது.
இதற்கிடையே தான் பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை ரகசியமாக பதுக்கி கிரானா மலையில் பதுக்கி வைத்துள்ளது. கிரானா மலையை இந்தியா தாக்கியது. இதனால் பயந்துபோய் பாகிஸ்தான் போரை நிறுத்தும்படி கெஞ்சியது' என்றும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் தான் தற்போது முக்கிய ஆதாரம் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பாகிஸ்தான் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் கிரானா மலையில் நம் நாடு தாக்கி உள்ளது பற்றிய விவரம் வெளியாகி உள்ளது. டேமியன் சைமன் எனும் எக்ஸ்பெர்ட் முக்கிய விஷயத்தை சேட்டிலைட் போட்டோவின் ஆதாரங்களுடன் கூறியுள்ளார்அது ‛ஆபரேஷன் சிந்தூர்' அட்டாக் முடிவடைந்த பிறகு ஜூன் 15ம் தேதி சேட்டிலைட் போட்டோவாகும். அதில் மலையின் அடிவாரத்தில் இந்தியாவின் ஏவுகணை பதம் பார்த்த தடயம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. மலை அடிவாரத்தில் ராணுவ பாதுகாப்பு கோபுரம் இருக்கிறது. சரியாக அதில் இருந்து 150 மீட்டர் தூரத்தில் இந்தியா ஏவுகணை வீசி இருக்கிறது.
இதற்கிடையே இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் ஷெபாஸ் ஷெரீப்பை நேரில் சந்தித்து பிரிட்டன் தூதரக அதிகாரி ஜேன் மேரியட் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் மற்றும் பாகிஸ்தான் பிரிட்டன் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக, பாகிஸ்தானில் உள்ள பிரிட்டன் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:”பாகிஸ்தான் - இந்தியா மோதலின்போது பதட்டங்களைத் தணிப்பதில் பிரிட்டனின் செயல்பாட்டுக்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார். மேலும், இந்தியாவுடன் நிலுவையில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 15 நாடுகள் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உயர்மட்ட விவாதம் நடைபெற்றது. பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார் சிந்து நதி நீர் ஒப்பந்தம், ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை குறித்து பேசினார். இஷாக் தாரின் கருத்துகளுக்கு பதிலடி கொடுத்து இந்தியாவின் பர்வதனேனி ஹரிஷ் பேசியதாவது:- முன்னேற்றம், செழிப்பு, வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நாடு இந்தியா என்பதை உலக நாடுகள் அறிந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதற்கு நேர்மாறான தோற்றத்தைப் பாகிஸ்தான் கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும், மதவெறி மற்றும் பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் மூழ்கியுள்ளதாகவும் ஐநாவுக்கான நிரந்தர இந்தியத் தூதர் கடுமையாக விமர்சித்தார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தொடர்ந்து கடன் வாங்கும் நாடு பாகிஸ்தான்தான் எனவும், அண்மையில்கூட 8 ஆயிரத்து 600 கோடி ரூபாயை பாகிஸ்தான் பெற்றுள்ளதாகவும் கூறினார். இதன்மூலம், சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் பெற்ற ஒட்டுமொத்த கடன், 18 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.தீவிரவாதம் குறித்து இந்தியா பாகிஸ்தானை மட்டுமல்ல அதனை ஆதரிக்கும் நாடுகளுக்கும் உரைக்கும் பேசியுள்ளது.