24 special

தாக்கப்பட்ட பி.சிதம்பரம்..? நீதிமன்றத்தில் பதட்டம் !

P. Chidambaram
P. Chidambaram

மேற்குவங்கம் : வழக்கு ஒன்றில் மேற்குவங்க நிறுவனத்தின் சார்பில் ஆஜராக வந்த பி.சிதம்பரத்தை சொந்த கட்சியினரே தாக்க முற்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேற்குவங்க நிறுவனம் ஒன்றின் பங்கு பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் ஆஜராக வந்த பி.சிதம்பரத்தை கண்டித்து காங்கிரசார் முழக்கங்களை எழுப்பினர்.




இதனிடையே மேற்குவங்க மாநில அரசுக்கு சொந்தமான மெட்ரோ டைரி எனும் நிறுவனத்தின் 47 சதவிகித பங்குகளை கெவெண்டர்  அக்ரோ லிமிடெட் எனும் நிறுவனத்திற்கு பங்குகள் விற்கப்பட்டதில் மோசடி வேலைகள் நடைபெற்றிருப்பதாக  மேற்குவங்க காங்கிரஸ் மாநில தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி என்பவர் கொல்கொத்தா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் கெவெண்டர் அக்ரோ லிமிடெட்நிறுவனத்திற்கு ஆதரவாக கொல்கொத்தா உயர்நீதிமன்றத்தில் நேற்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் வழக்கறிஞராக ஆஜரானார். இதனால் கொந்தளித்த  காங்கிரஸ் தொண்டர்கள் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியே வருகையில் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் உயர்நீதிமன்ற காங்கிரஸ் வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் பி.சிதம்பரத்தை எதிர்த்து கோஷமிட ஆரம்பித்தனர்.

காங்கிரஸ் தலைவரும் வழக்கறிஞருமான கவுஸ்தாவ் பாக்சி செய்தியாளர்களிடம்  " மாநில அமைச்சரவை ஒப்புதலுடன் மக்களின் கோடிக்கணக்கான பணம் திருடப்பட்டுள்ளது. மமதாவின் ஆட்சியில் பல்வேறு வகையில் ஊழல் நடந்துவருகிறது. திரிணாமூல் தொண்டர்களால் தினமும் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். சிதம்பரம் போன்ற ஆட்களால் மாநிலத்தில் காங்கிரஸ்  காலூன்ற முடியாமல் நிற்கிறது. சிதம்பரம் உடனடியாக வழக்கில் இருந்து விலக வேண்டும்" என தெரிவித்தார். 

மேலும் பி.சிதம்பரம் குறித்து தொண்டர்கள் கூறுகையில் "மமதாவின் அரசை காப்பற்றுவதிலேயே குறியாய் இருக்கிறார். தலைவர் ஆதிர் சவுத்ரி வழக்கு தொடுத்திருக்கிறார். சொந்த கட்சியினரை எதிர்த்தே சிதம்பரம் ஆஜராவது அவர் எப்படிப்பட்ட புல்லுருவி என்பதை வெளிக்காட்டுகிறது. மமதாவின் பினாமி போல சிதம்பரம் செயல்படுகிறார்" என விமர்சித்து வருகின்றனர்.