24 special

வசமாய் சிக்கிய டிஜிபி..! உள்துறை அமைச்சகம் கிடுக்கிப்பிடி !

Dgp
Dgp

கேரளா : கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சியில் ஊழல் மலிந்துவருவதாக எதிர்க்கட்சியினர் குரல்கொடுத்து வருகின்றனர். தங்க கடத்தல் முதல் பினராய் மருமகன் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சிவில் சப்ளை டெண்டர் சமீபத்தில் வழங்கியது மற்றும் மரக்கடத்தல் உள்ளிட்ட பல பூகம்பங்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது மாநில டிஜிபி ஒருவரும் சிக்கியிருப்பது பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.


கேரளாவில் டிஜிபியாக இருப்பவர் சுதேஷ் குமார். இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு நகைக்கடைக்கு தனது மகளுடன் சென்று நகை வாங்கியுள்ளார். அப்போது கடை உரிமையாளர் நகைகளுக்கு ஐந்து சதவிகித தள்ளுபடி வழங்கியுள்ளார். ஆனால் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை மிரட்டி 95 சதவிகிதம் தள்ளுபடி பெற்றுள்ளார். மேலும் அவர் தனது குடும்பத்துடன் 28 அக்டோபர் 2016ல் சீனா சென்றார்.

கோழிக்கோட்டை பூர்விகமாக கொண்ட கத்தாரில் தொழிலதிபராக இருக்கும் ஒருவரால் 15 லட்சத்திற்கும் மேலான பணத்தை தனது பயணச்செலவிற்கு பெற்றிருக்கிறார். மேலும் பல மதிப்புள்ள பொருட்களையும் பெற்றிருக்கிறார். தொழிலதிபர் மூலம் ஆறுமுறை அரசு அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். இவர் போக்குவரத்து ஆணையராக இருந்த காலகட்டத்தில் பணிநியமனம் மற்றும் இடமாற்றம் ஆகியவற்றிற்கு இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தான் வாங்கிய லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சப்பணத்தை வெளிநாட்டில் உள்ள தனது மகனின் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்ததாக கூறப்படுகிறது. இவர் மீது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது லஞ்சம் வாங்கியது உட்பட பலபுகார்கள் அடுத்தடுத்து குவிந்ததால் மாநில உள்துறை அமைச்சகம்  சுதேஷ் மீது முதற்கட்ட விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே விஜிலென்ஸ் துறையில் இயக்குனராக இருந்த இவரை சிறைத்துறைக்கு கடந்தவாரம் மாநில அரசு மாற்றி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.