24 special

முதல் மாதம் மட்டுமே 1000 அடுத்த மாதம் முதல் 0.......சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்!

mk stalin
mk stalin

உரிமை திட்டத்தின் மூலம் தமிழக பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டது. இந்த தொகையை தொடங்கிய இரண்டாவது மாதமே பெண்களுக்கு வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திமுக அரசு ஆட்சிக்கு வரும்போது பெண்களுக்கு மாதம் 1000 தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆட்சிக்கு வந்த பின் அதனை கண்டு கொள்ளாமல் இரண்டரை வருடம் கழித்து செப்டம்பர் மாதம் பெண்கள் உரிமை தொகை திட்டத்தை கையில் எடுத்தது. இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்த சுமார் 56 லட்சம் பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து நிராகரிக்கப்பட்ட பெண்கள் மீண்டும் மேல் முறையீடு செய்யலாம் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.


மேல் முறையீடு செய்தும் முதல் மாதத்திற்கான உரிமை தொகை அரசு தரப்பில் இருந்து முறையக வழங்கவில்லை. இதனை கண்டித்து பொதுமக்கள் பல்வேறு மாவட்டத்தில் ஒன்று திரண்டு வட்டாச்சியர் அலுவலகத்தில் மறியலில் ஈடுபட தொடங்கினர். அரசு அலுவலர்களும் அடுத்த மாதம் வரக்கூடும் என்று சமாதான படுத்தினர். இந்நிலையில் நேற்று தஞ்சாவூர் மாவட்டம் மணகரம்பை ஊராட்சி அரசூர் கிராமத்தில் சுமார் 400 ரேசன் கார்டுகளில் 250க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகளின் பெண்களுக்கு உரிமை தொகை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக அரசின் இசேவை மையத்தில் விண்ணப்பிக்க சென்றால் கையூட்டலாக பணம் கேட்கின்றனர் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து கோட்டாட்சியர்  வட்டாட்சியர் அலுவலகத்திற்கு இரண்டு மாதங்களாக அலைந்தும் முறையான பதில் இல்லை என குற்றம்சாட்டி தஞ்சை அரியலூர் இடையிலான சாலையில் அரசூர் என்ற இடத்தில் 300 -க்கும் மேற்பட்ட பெண்கள் திடிரென சாலையில் அமர்ந்து மறியலில ஈடுப்படனர்.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த வட்டாச்சியர்  சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த மாதம் முதல் உரிமை தொகை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் களைந்து சென்றனர். இதற்கிடையில் கூலி வேலை செய்யும் பெண்கள் கூறுகையில்  “323 கார்டில் 277 பேருக்கு உரிமை தொகை கிடைக்கவில்லை.. ஆர்.டி.ஒ தாசில்தார் அனைவரிடமும் புகார் தெரிவித்தோம் யாரும் முறையாக பதில் சொல்லவில்லை”  என கூறுகிறார்கள்.  எங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான முறையான காரணத்தை கூற மறுக்கின்றனர்.

நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்து வருகிறோம் எங்களுக்கு எப்படி விடுப்பட்டது என தெரிவிக்க வேண்டும். வேலைவெட்டி இல்லையா,.. எதற்கு அழைகிறீர்கள் ? என ஆர்.டி.ஒ கேட்கிறார்.அப்படினா நாங்கள் லூசா . மரியாதை இல்லாமல் அதிகாரிகள் நடத்துகிறார்கள். எங்கள் ரேஷன் கார்டு எப்படி பதிவாகவில்லை என கூற வேண்டும். யார் மீது தவறு என்பது தெரியவேண்டும். ரேஷன் பொருட்கள் அனைத்தும் வாங்கி வருகிறோம். அரசூர் என்ற கிராமம் எங்கு இருக்கிறது என அதிகாரிகள் கேட்கிறார்கள். இது அத்திவெட்டி கிராமமா..? “  என்றார். திமுக அரசு ஒரு மாதம் கொடுத்து அடுத்த மாதம் நிறுத்துவதற்கு எதற்கு பெண்களுக்கு உரிமை தொகை கொடுத்தீர்கள். அரசு முறையாக கொடுத்து நடுவில் இருக்கும் அலுவலர்கள் ஏதேனும் செய்கிறார்களா என்று கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

இதுபோல் கடந்த சில தினங்களுக்கு முன் விழுப்புரம், புதுக்கோட்டை, சேலம் போன்ற மாவட்டத்தில் உரிமை தொகை கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலை மறியலில் பெண்கள் ஈடுபடுவதன் மூலம் உரிமை தொகை இதற்கு மேல் படிப்படியாக குறைய வாய்ப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இன்னும் எத்தனை கிராமங்களில் இதுபோன்று பெண்கள் உரிமை தொகை கேட்டு போராட்டம் செய்து வருகின்றனர் என்பதனை தமிழக அரசு முறையாக விசாரித்து அவர்கள் திட்டத்தில் பயனடைய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர் பொதுமக்கள்.