24 special

விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்கும்.....அரசியல் தலைவர்கள்!

actor vijay, kadambur raja
actor vijay, kadambur raja

கோவில்பட்டியில் திருப்பூர் குமரனின் 120வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியில் அதிமுக  முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தற்போது சினிமா படங்கள் வெளியாவதில் சிக்கல் நீடித்துள்ளது இதற்கு முழு காரணம் திமுக தான் அவர்கள் ஒரு தயாரிப்பு (ரெட் ஜெயண்ட்) நிறுவனத்தை வைத்து கொண்டு சினிமா படங்களை இயக்கும் இயக்குனர்களை மிரட்டி வருகின்றனர்.தொடர்ந்து பேசிய அவர்  ”விஜய்யை பார்த்து திராவிட முன்னேற்ற கழகம் பயப்படுகிறது. சினிமாவில் எந்த நடிகர்களாக இருந்தாலும் ஏற்றத்தாழ்வுகளை அரசு பார்க்க கூடாது.  கடந்த அதிமுக ஆட்சியில் முன்னணி நடிகர்களின் படம் வரும்போது எந்த பாரபட்சம் பார்க்காமல் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கொடுத்திருந்தோம்.


2006-2011 காலகட்டத்தில் குறிப்பிட்ட நிறுவனம் மட்டுமே படங்களை வெளியிட முடியும் என்ற நிலை இருந்தது. 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2021 வரைதிரைப்படத் துறையில் வெளிப்படைத்தன்மை இருந்தது. ஆனால்,தற்போது நிலைமை மாறிவிட்டது.200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை திரையிட முடியாத நிலை இருக்கிறது. இதற்கு காரணம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற தனி நிறுவனத்தின் ஆதிக்கம்தான்". என தெரிவித்தார்.லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டிற்கு அனுமதி வழங்காமல் இருந்தது இந்த திமுக அரசு தான். ஆனால்இதனை திசை திருப்பவே சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கொடுத்தனர். முன்னதாக ஜெயிலர் படத்திற்கு மட்டும் இசை வெளியிட்டு விழாவிற்கு ஆதரவு கொடுத்தது ஏன்? அது அவங்களுடைய தயாநிதி மாறன் தயாரித்தால் அதற்கு அனுமதி தந்தனர். 

இதற்கிடையில் விஜய் அரசியல் வருவது தொடர்பாக பலவேறு நிகழ்ச்சிகளை கையில் எடுத்தார் குறிப்பாக மாணவர்களுக்கு பரிசு வழங்கினார், தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பிறந்தநாள், நினைவு நாளில் மற்ற கட்சியினரைப் போல விஜய் மக்கள் இயக்கத்தினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த விஜய் தனது மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். அதேபோல திருமாவளவன், அன்புமணி ராமதாஸ் என தலைவர்களுக்கு போனில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதும் அவரின் அரசியல் ஆசையை உறுதிப்படுத்துகிறது. ஆனால், விஜய் அரசியலுக்கு வருவது குறித்து அவர் மட்டும்தான் பதில் சொல்ல முடியும் என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துவிட்டார். இதனை வைத்து பார்க்கும்போது விஜய் அரசியல் வருவது உறுதியாக தெரிகிறது.

ஆனால், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை அவர் சந்திக்க மாட்டார் எனவும் 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் களம் காணலாம் என்று கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.லியோ படத்திற்கு பல சிக்கல்களை எழும்பியபோது ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டி ஆதரவு தெரிவித்தனர். அந்த போஸ்டரில் விஜய் அரசியல் வாழ்க்கையில் வந்த பின் ஏற்படும் மாற்றம் குறித்து போஸ்டர் ஓட்டினர். சமீபத்தில் மதுரையில் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்பது போல் அதற்கு பிரதமர் மோடி பதவி பிரமாணம் செய்து வைக்க தமிழ்நாடு வருவது போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டியது ரசிகர்களிடம் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு விஜய்க்கு ஆதரவாக கூறியது முழுக்க முழுக்க அரசியல் காரணம் தான் என்று சமூக தளத்தில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். விஜய் அரசியலுக்கு வருவது உறுதியான நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் நாம தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கியது குறிப்பிடத்தக்கது.