24 special

'அண்ணாமலையை ஒதுக்கிட்டாங்க ப்ரோ' என்றவர்களுக்கு வசமான பதிலடி கொடுத்த டெல்லி மேலிடம்...!

annamalai
annamalai

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு பிரிந்த சமயத்தில் அரசியல் ரீதியாக கடும் விமர்சனங்கள் எழுந்தது, குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான்தோன்றித்தனமாக செயல்படுகிறார்! அதன் காரணமாகத்தான் அண்ணாமலையை டெல்லி மேலிடம் நேரில் வரவழைத்துள்ளது! டெல்லிக்கு வரவழைத்து அண்ணாமலைக்கு செம டோஸ் விடப்பட்டது! அண்ணாமலையை இனி டம்மி செய்து விடுவார்கள்! இனி தமிழக பாஜகவை இங்கு இருக்கக்கூடிய சீனியர் லீடர்கள் தான் வழி நடத்துவார்கள்! அண்ணாமலை இனி தமிழகத்தில் தமிழக அரசியலை பேச மாட்டார்! இனி அண்ணாமலை டம்மி போஸ்ட் போலத்தான் இருப்பார்!


அண்ணாமலைக்கு இனி பாஜகவில் பவர் கிடையாது! இன்னும் சிறிது நாட்களில் குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல் 2024 ஆம் ஆண்டு முடிந்தவுடன் அண்ணாமலைக்கு ஏதாவது அமைச்சர் பதவி அல்லது ஆளுநர் பதவி கொடுத்து அனுப்பி விடுவார்கள் என்றெல்லாம் வேறு பல வேறு விதமான விமர்சனங்கள் எதிர்தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வந்தது.அது மட்டுமில்லாமல் அண்ணாமலை டெல்லியில் இருந்து திரும்பியவுடன் யாத்திரையை தள்ளி வைத்தது வேறு அண்ணாமலைக்கு டெல்லி மேலிடம் ஆதரவு இல்லை என மேலும் பல விமர்சனங்களை ஏற்படுத்தியது.  இந்த நிலையில் 'என் மண் என் மக்கள்' யாத்திரை சிறுது இடைவேளைக்குப் பிறகு இன்று துவங்கியது, துவங்கிய முதல் நாளிலேயே அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் அளிக்கும் விதமாக அமைந்துவிட்டது. . 

இரண்டாம் கட்ட பாதயாத்திரையை நிறைவு செய்த அண்ணாமலை மூன்றாம் கட்டமாக இன்று திருப்பூரில் அண்ணாமலை யாத்திரையை தொடங்கினார், துவக்க விழா திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடந்தது, அந்த விழாவில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், மத்திய அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பியூஸ் கோயல் அண்ணாமலையுடன் யாத்திரைக்கு வலு சேர்ப்பதற்காக வந்துள்ளேன் என கூறியது மட்டுமல்லாமல் 'சனாதன விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் தேர்தலில் பதிலளிக்க வேண்டும்! பிரதமர் மோடி தமிழர்களின் பண்பாடு கலாச்சாரத்தை உலக நாடுகளுக்கு கொண்டு செல்கிறார், தமிழகம் விரும்பும் மாற்றத்தை அண்ணாமலை வழங்குவார்' எனக் கூறி அண்ணாமலையை யாத்திரையை துவங்கி வைத்தார்.

அண்ணாமலையுடன் நடக்கும்பொழுது அவர் 'என் மண் என் மக்கள்' யாத்திரை சட்டையை அணிந்து கொண்டு நடந்தார், இது மட்டுமல்லாமல் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் ஆகியோர் ஒரே மேடையில் இருந்து கொண்டு அண்ணாமலைக்கு ஆதரவு தரும் விதமாக யாத்திரையில் கலந்து கொண்டது விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமாறு அமைந்துவிட்டது, இதன் பின்னணியை விமர்சித்த பொழுது அண்ணாமலை இனி அவ்வளவுதான், அண்ணாமலை ஓரங்கட்டப்பட்டுவிட்டார் என்ற விமர்சனங்களுக்கு ஒவ்வொருத்தவரும் தனித்தனியாக பதிலடி கொடுப்பது நன்றாக இருக்காது என கருதிய பாஜக மேலிடம் தான் இப்படி சீனியர்கள் அனைவரையும் அண்ணாமலை பின்னால் திரண்டு யாத்திரைக்கு செல்ல சொல்லி அறிவுறுத்தி இருக்கிறது. 

அதன் பின்னணி தான் இந்த பிரமாண்ட யாத்திரை துவக்கவிழா என சில பாஜக முக்கிய பிரமுகர்கள் கருத்து தெரிவித்தனர், 'அண்ணாமலை எல்லாம் இனி பாஜகவில் காலி' என்றவர்களுக்கு முகத்தில் அடிக்கும் விதமாக இன்றைய யாத்திரையில் பல நிகழ்வுகள் நடந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அண்ணாமலை யாத்திரையில் இப்படி சீனியர்கள், மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்டது அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து மாற்றப்படுவார் என எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துவிட்டது என விமர்சனங்கள் எழுந்துள்ளது...