24 special

இப்போ தெரிகிறதா மோடி யாரென்று ! 27 நாடுகளோடு ஒரே ஒப்பந்தம்.! உலகில் இது முக்கியமான மாற்றம்! அழியும் அமெரிக்க ஆதிக்கம்

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சர்வதேச அரங்கில் ஆடியிருக்கும் இந்த ஆட்டம், உலக வல்லரசுகளை நிலைதடுமாறச் செய்திருக்கிறது. குறிப்பாக, அமெரிக்கப் பிரதிநிதிகள் கனவிலும் எதிர்பார்க்காத ஒரு சூழலை இந்தியா இன்று நிஜமாக்கிக் காட்டியுள்ளது. கடந்த வாரம் முழுவதும் அமெரிக்காவின் நிர்வாகத் தரப்பில் ஒருவிதமான முணங்கலும் அதிருப்தியும் நிலவி வருவதை உலகம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஐரோப்பா மீது அமெரிக்கா கொண்டுள்ள கடும் கோபத்திற்கு முதன்மையான காரணம், இந்தியாவின் குடியரசு தின விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வருகை தந்ததுதான். வந்தவர் வெறுமனே பார்வையாளராக மட்டும் இருக்கவில்லை; "வெற்றியடையும் இந்தியா உலகை நிலையானதாகவும் பாதுகாப்பானதாகவும் ஆக்குகிறது" என்று அவர் உதிர்த்த வார்த்தைகள் அமெரிக்காவின் காதுகளில் நெருப்பாக விழுந்திருக்கின்றன. ஐரோப்பாவுக்காக நாங்கள் எவ்வளவோ தியாகங்களைச் செய்தும், அவர்கள் இந்தியாவோடு கை கோர்ப்பதா என்று டிரம்ப்பின் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசண்ட் புலம்பி வருவது, இந்தியாவின் ராஜதந்திர வெற்றிக்குக் கிடைத்த நற்சான்றிதழ்.


அமெரிக்காவிற்கு மிகவும் நெருக்கமானவர்களாகக் கருதப்பட்ட ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகிய இருவரும், இன்று அமெரிக்காவின் அழுத்தங்களை உதறித் தள்ளிவிட்டு டெல்லியில் நான்கு நாள் பயணமாக முகாமிட்டுள்ளனர். இது வெறும் நட்பு ரீதியான பயணம் அல்ல; கடந்த 19 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA), ஜனவரி 27, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது. உலகப் பொருளாதாரத்தில் கால் பங்கைக் கொண்ட, சுமார் 200 கோடி மக்களை உள்ளடக்கிய ஒரு பிரம்மாண்டமான சந்தையை இந்த ஒப்பந்தம் உலகிற்கு அறிமுகம் செய்கிறது. மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் இதனை "வர்த்தக ஒப்பந்தங்களின் தாய்" என்று வர்ணிப்பதில் எந்த மிகையுமில்லை. இந்தியாவின் 20 ஆண்டு காலக் கனவு  நினைவாகி உள்ளது. உலகப் பொருளாதார சமன்பாட்டையே மாற்றியுள்ளது இந்த ஒப்பந்தம். 

ஐரோப்பிய நாடுகளின் இந்தத் திடீர் மாற்றத்திற்கு டொனால்ட் டிரம்ப்பின் கொள்கைகளே முக்கியக் காரணம். ஐரோப்பிய கார்களுக்கு டிரம்ப் விதித்த அதீத வரிகளால் வோக்ஸ்வாகன் போன்ற நிறுவனங்கள் நிலைகுலைந்து போயின. அமெரிக்காவை மட்டும் நம்பினால் இனி பொருளாதாரச் சீரழிவு நிச்சயம் என்பதை உணர்ந்த ஐரோப்பா, தனது பார்வையை இந்தியாவின் பக்கம் திருப்பியுள்ளது.  ரஷ்யா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா என விரிவடைந்த இந்தியாவின் செல்வாக்கு இப்போது ஐரோப்பாவையும் தன்வசப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அதட்டல்களுக்கு அஞ்சாமல், உலக நாடுகளைத் தன் பக்கம் ஈர்த்து வரும் மோடியின் இந்த காய் நகர்த்தல், "உலகங்கள் யாயும் உன் அரசாங்கமே" என்ற கவிவாக்கிற்கு ஏற்ப, இந்தியாவின் அதிகாரத்தை உலக அரங்கில் நிஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA), தமிழகத்தை இந்தியாவின் ஏற்றுமதி மையமாக உயர்த்தப்போகிறது. சென்னை, காஞ்சிபுரம், ஓசூரின் கார் உதிரிபாகங்கள் இனி ஐரோப்பியச் சந்தையில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். இது லட்சக்கணக்கான தமிழகத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்.