Editor choice

இப்போது "ட்ரெண்டிங்கில்" இந்த "பெண்மணி"தான் டாப் ஸ்கெட்ச் போட்டு பதிலடி !!!

jeyalaxmi
jeyalaxmi

கீழே விழுவது இயல்பு ஆனால் கீழே விழுந்த பின்பு எப்படி எழுகிறோம் என்பதில்தான் வெற்றி இருக்கிறது என ஒரு தன்னம்பிக்கை வாக்கியம் உள்ளது அந்த வகையில் அதனை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது பாஜகவின் சமீபத்திய மூவ்!


ஒத்த ஓட்டு பாஜக என பாஜக சின்னத்தில் போட்டியிடாத நபரை கொண்டு தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில் அதனை நம்பி தேசிய ஊடகங்களும் செய்தி வெளியிட்டன, ரிபப்ளிக் நிறுவனமும் இந்த செய்தியை வெளியிட்டது, ஒரு ஓட்டு வாங்கும் நிலையில் தான் தமிழகத்தில் பாஜகவின் பலம் இருப்பதாக பாஜகவை எதிர்த்து அரசியல் செய்யும் கட்சிகளும், சில அரசியல் விமர்சகர்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த சூழலில்தான் ஊடகங்கள் பரப்பிய செய்தியை ஊடகங்கள் வாயிலாகவே முறியடிக்க பாஜக எண்ணியது அதற்கு முறையான திட்டத்தை வகுத்து, உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் வெற்றி பெற்றவர்களை அழைத்து அதிகார பூர்வமாக அவர்களின் தகவலை உறுதி செய்து பெயர் முகவர் செல்போன் எண்களுடன் விவரத்தை சேகரித்தது அண்ணாமலை தலைமையிலான குழு.

இதன் பிறகு செய்தியாளர் சந்திப்பில் புள்ளி விவரங்களுடன் தகவலை குறிப்பிட்டார் அண்ணாமலை, ஒத்த ஓட்டு என கிண்டல் செய்தவர்கள் கவனத்திற்கு  ஒன்றல்ல இரண்டல்ல 1446 வாக்குகள்வித்தியாசத்தில் வள்ளியூ்ர் செட்டிகுளம் 15 வது வார்டில் திமுக வேட்பாளரை தோற்கடித்து இருக்கிறார் பாஜகவை சேர்ந்த ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன். என பல்வேறு வேட்பாளர்களின் வெற்றியை வெளி உலகிற்கு வெளிப்படையாக தெரியப்படுத்திவிட்டார்.

300 மேற்பட்ட இடங்களில் தாமரை சின்னம் வெற்றி பெற்றுள்ளதுஎன இதன் மூலம் திமுகவை வீழ்த்த எங்களால் முடியும் என சொல்லிவிட்டார் அண்ணாமலை தற்போது பாஜகவினர் மத்தியில் ஒத்த ஓட்டு என கிண்டல் செய்தவர்களை தேடி பிடித்து பாஜகவிடம் தோற்ற திமுக, என ஜெயலட்சுமி வெற்றியை கொண்டாடி வருகின்றனர் பாஜகவினர் . இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறார் ஜெயலட்சுமி. 

இது ஒருபுறம் என்றால்  பாஜக சார்பில் "உள்ளாட்சி" தோல்வி அடைந்த வேட்பாளர்களை சென்னையில் காமலாலயத்திற்கு அழைத்து அவர்கள் கருத்துக்களை கேட்க இருக்கிறாராம் அண்ணாமலை அன்றைய தினம் வித விதமாக போலி செய்தியை பரப்பிய ஒரு சில ஊடகங்களுக்கு முறையான கச்சேரி இருக்கிறதாம். தோற்ற வேட்பாளர்களை எந்த கட்சியும் தேர்தல் முடிந்த உடன் அழைத்து பேச வாய்ப்புகள் குறைவு அப்படி இருந்தும் 'அண்ணாமலை' அழைத்து இருக்கிறார் என்றால் விஷயம் இருக்கிறது என்கின்றன கமலாலய வட்டாரங்கள்.