
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கு இருக்கிறது என்பதை தேட வேண்டியுள்ளது. குறிப்பாக சமூக நீதி அரசு என மார்தட்டி கொள்ளும் விளம்பர மாடல் அரசில் கடந்த மூன்று ஆண்டுகளில் சாதிய வன்முறைகள் 40 விழுக்காடு அதிகரித்திருக்கின்றன. அதாவது, வழக்கமாக ஆண்டுக்கு 1,400 - 1,500 வன்கொடுமை வழக்குகள் பதிவாகும் நிலையில், இப்போது 2,300 - 2,600 வழக்குகள் பதிவாகின்றன. “தென்மாவட்டங்களிலேயே, அதிகமாகச் சாதிய மோதல்கள் நிகழ்வது திருநெல்வேலியில்தான். சட்டம்-ஒழுங்கும் சீர்கெட்டுப் போய்விட்டது. கடந்த ஏழு மாதங்களில் மட்டுமே 30-க்கும் மேற்பட்ட கொலைகள் நெல்லையில் நிகழ்ந்திருக்கின்றன. இதைத் தடுப்பதற்கு உண்டான உருப்படியான எந்த வேலையையும் பார்க்கவில்லை அரசு. என்கிறார்கள்.
திமுக அரசு பதவியேற்றத்திலிருந்து ஒரே துறையில் கவனம் செலுத்தி வந்தது என்றால் அது ஒன்று தான் அது தான் விளம்பர செய்தி துறை. என்றே சொல்லலாம். அதை செய்வேன் இதை செய்வேன் என கூறி ஆட்சிக்கு வந்த திமுக வெறும் விளம்பரத்தை மட்டுமே செய்து வருகிறது. அனைத்து கட்சிகளும் இந்த திராவிட மாடல் அரசு விளம்பரத்திற்கு எவ்வளவு செலவு செய்தது அதற்கு வெள்ளை அறிக்கை கேட்டும் வருகிறார்கள்.
மாயவலைப்பேச்சு, போட்டோஷூட், விளம்பரத்திற்காக கோடிகோடியாய் செலவு, இவைதான் இந்த ஆட்சியில் நடக்கிறது. அரசு செலவில், தந்தை பெயரை அரசுத் திட்டங்களுக்கு வைப்பது, அதிகமான இடங்களில் கருணாநிதிக்கு சிலை வைத்தது, மகனை துணை முதலமைச்சராக்கியதைத் தவிர வேறு எதையும் அவர்கள் சாதனையாகச் செய்யவில்லை. இப்போது பேருக்காக திட்டத்தை அறிவித்து, அரசுப் பணத்தில் தன் பெயரையே விளம்பரப்படுத்திக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின். டெண்டரே விடாமல் ரூ.22 கோடிக்கு 2 விளம்பர ஏஜென்சிகளிடம் அரசு விளம்பரம் செய்யக் கொடுத்திருக்கிறது விளம்பர ஸ்டாலின் அரசு.
இதற்கிடையே தமிழக அரசு சார்பில் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள “உங்களுடன் ஸ்டாலின்’ மற்றும் புதிதாக தொடங்கப்படவுள்ள ‘நலம் காக்கும் மருத்துவம்’ போன்ற அரசின் திட்டங்களில் ‘உயிருடன் வாழும்’ அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி
அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி அரசு சார்பில் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் புதிதாக தொடங்கப்படவுள்ள திட்டங்களில் தமிழக முதல்வரின் புகைப்படத்தை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் உயிருடன் வாழும் அரசியல் தலைவர்களின் பெயர்களை அரசி்ன் திட்டங்களில் பயன்படுத்தக் கூடாது.
எனவே தமிழக அரசின் திட்டங்களில் இடம்பெற்றுள்ள முதல்வரின் பெயரை நீக்க வேண்டும். அதேபோல அரசின் திட்டங்கள் மற்றும் அதுதொடர்பான விளம்பரங்களில் இடம்பெற்றுள்ள திமுக சித்தாந்த தலைவர்களான கருணாநிதி, அண்ணா, பெரியார் ஆகியோரது பெயர்களையோ அல்லது புகைப்படங்களையோ பயன்படுத்தக் கூடாது.
அதேபோல அரசி்ன் திட்டங்களில் ஆளுங்கட்சியின் சின்னம் மற்றும் கொடியையோ, பெயரையோ பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவது உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கும், தேர்தல் ஆணைய உத்தரவுகளுக்கும் முரணானது. ஆனால் தமிழக அரசு புதிதாக தொடங்கவுள்ள திட்டங்கள் மற்றும் ஏற்கெனவே தொடங்கி செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு எதிராக நாங்கள் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.