Tamilnadu

தென்னை மரத்துல ஒரு குத்து பனை மரத்துல ஒரு குத்து குத்திய ஜோதிமணி வைத்து செய்யும் நெட்டிசன்கள்!

jothimani
jothimani

சினிமா நடிகர் சித்தார்த் விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த செயல் இந்திய அளவில் அதிர்வலைகளை உண்டாக்கியது தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது இந்த சூழலில் பல்வேறு நபர்கள் சித்தார்த்திற்கு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சித்தார்த்தை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் நம் எல்லோரையும் போல திருமிகு.சாய்னா நேவாலுக்கும் தனது அரசியல் கருத்துக்களை சொல்லும் உரிமை இருக்கிறது. அவருடைய கருத்தோடு முரண்பட்டால் நாகரிகமான முறையில் பதில் கருத்து சொல்லலாம். விமர்சிக்கலாம்.


அவர் பெண் என்பதாலேயே பாலியல் ரீதியான தாக்குதலை தொடுப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. நடிகர் திரு.சித்தார்த் தீவிரமான அரசியல் நிலைப்பாடு கொண்டவர். துணிச்சலாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தக் கூடியவர். சிறந்த கலைஞர். சமூகப் பொறுப்புணர்வு மிக்கவர். இளைய தலைமுறைக்கு ஒரு முன்மாதியாக இருப்பவர். அப்படிப்பட்டவர் மிகுந்த கவனத்தோடும்,பொறுப்போடும் கருத்துக்களை வெளியிடவேண்டும். 

பாஜக/ஆர் எஸ் எஸ் இயக்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட,திரு.மோடி உள்ளிட்ட தலைவர்களால் சமூக ஊடகங்களில் பின்தொடரக்கூடிய அந்த இயக்கத்தினர், பெண்களிடம் ஆபாசமாகவும், அறுவெறுக்கத்தக்க வகையிலும் நடந்துகொள்கிறார்கள். பாலியல் ரீதியாக அச்சுறுத்தும் போக்கை கைக்கொள்கிறார்கள். பாஜகவின் இந்த  ஆபாச,வக்கிர தாக்குதலை என்போன்ற எத்தனையோ பெண்கள் தினம் தினம் எதிர்கொள்கிறோம். அதை நாம் கடுமையாக எதிர்க்கிறோம். அச்சமற்று தொடர்ந்து பாஜகவை தோலுரிக்கிறோம். ஆகவே நாம் கூடுதல் கண்ணியத்தோடு பெண்களிடம், பாஜக சகோதரிகளிடம் நடந்துகொள்வது அவசியம் என குறிப்பிட்டுள்ளார் ஜோதிமணி.

ஜோதிமணி சித்தார்த் செயலை வன்மையாக கண்டிக்கிறேன் என்று எங்குமே சொல்லவில்லை மாறாக சித்தார்த் இளைய தலைமுறைக்கு முன் மாதிரி அவர் பேசும் போது பொறுப்புடன் பேசவேண்டும் என ஆபாசமாக இரட்டை அர்த்தத்தில் பேசிய சித்தார்த்ற்கு அறிவுரை வழங்கியுள்ளார், மேலும் இந்த விஷயத்தில் வழக்கம் போல் பாஜகவை உள்ளே இழுத்து அரசியலும் செய்துள்ளார் ஜோதிமணி இதை பார்த்த நெட்டிசன்கள் பிரபல வடிவேலு காமெடி வசனமான தென்னை மரத்தில் ஒரு குத்து பனை மரத்தில் ஒரு குத்து என கிண்டல் அடித்து வருகின்றனர். சித்தார்த் பேசிய வார்த்தைகளை வேறு ஏதேனும் ஒரு பாஜக பிரமுகர் அல்லது பாஜக ஆதரவு நடிகர் சொல்லியிருந்தால் இந்நேரம் ஜோதிமணி என்ன ஆட்டம் போட்டு இருப்பார் எல்லாம் நடிப்பு என பலரும் அவரது பதிவிற்கு கீழே கமெண்ட் அடித்து வருகின்றனர்.