
ஈரான், சவூதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளில் அரசியல், மத மற்றும் சமூக பிரச்சினைகள் காரணமாக உள்நாட்டு மோதல்கள் தீவிரமாக காணப்படுகின்றன. ஈரானில் உள்நாட்டு எதிர்ப்புக் குழுக்கள் அதிகரித்து வருகின்றன. proxy conflicts மூலம் வெளிநாட்டு நாடுகளுடனான மோதல்களும் நிகழ்கின்றன. ஷியா மற்றும் சன்னி பிரிவினை காரணமாக அரசியல் பாகுபாடு தீவிரமாக உள்ளது. சவூதி அரேபியாவில் ஹூதி குழுக்களை எதிர்கொண்டுபோராட்டம் நடைபெறுகிறது. இந்த நாட்டில் சன்னி சக்தியாக தன்னை நிலைநிறுத்த முயற்சி தொடர்கிறது.
துருக்கி சிரியா மற்றும் இலிபியாவில் அதிகாரப் போராட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஈரான் மற்றும் சவூதி ஆதரவுடன் செயல்படும் குழுக்களில் தலையீடு அதிகம் காணப்படுகிறது. பாகிஸ்தானில் தீவிரவாத குழுக்கள் மற்றும் மத–அரசியல் பாகுபாடு காரணமாக இடைப்பட்ட மோதல்கள் பரவலாக உள்ளன. வங்கதேசத்தில் அரசாங்கம் சமூக அமைதியை பாதுகாக்க சில நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சில பகுதிகளில் மத அடிப்படையிலான சண்டைகள் தொடர்ந்து நிகழ்கின்றன.இஸ்லாமிய உலகின் பல நாடுகளில் மத, அரசியல், பொருளாதார பிரச்சினைகள் ஒருங்கிணைந்து மோதல்களை உருவாக்கி வருகின்றன.
உலகமே இந்தநிலையில் இருக்கும் தருவாயில் இந்தியா தான் இஸலாமியர்களுக்கு பாதுகாப்பான நாடு என உலக அரசியல்தலைவர்கள் பேச தொடங்கியுள்ளார்கள். குறிப்பாக அண்டை நாடான வங்கதேசம், பாகிஸதானில் உள்ள இந்துக்கள் கொலை செய்யப்படுகிறார்கள் ஆனால் இந்தியாவில் அப்படி எந்த ஒருசம்பவமும் நடைபெறவில்லை. இதனை இஸ்லாமியர்கள் புரிந்து கொண்டு வருகிறார்கள். சில அரசியல் தலைவர்கள் ஒட்டு பிச்சைக்காக சிறுபான்மை ஆதரவு என்ற பெயரில் அரசியல் செய்து பிரிவினை உண்டாக்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் மேற்கு ஆசிய நாடான ஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக நாடு முழுதும் பெரும் போராட்டங்கள் தொடர்கின்றன. பொருளாதார சீர்குலைவு, பணமதிப்பு வீழ்ச்சி, சர்வதேச தடைகள் ஆகிய காரணங்களுக்காக துவங்கிய போராட்டம், தற்போது ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தலைமையிலான ஆட்சிக்கு சவால் விடும் அளவுக்கு வளர்ந்து உள்ளது.போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்புப் படையினர் திணறி வருகின்றனர். இதுவரை அவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 538 பேர் கொல்லப்பட்டுள்ளனர்;
2,600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இணையம், தொலைபேசி இணைப்புகள் முழுதுமாக துண்டிக்கப்பட்டுள்ளன. தலைநகர் டெஹ்ரான் மற்றும் மஷ்ஹத் உள்ளிட்ட பெரிய நகரங்களில் நேற்றும் போராட்டங்கள் தொடர்ந்தன. 'கமேனி ஆட்சி ஒழிக' என்ற முழக்கங்கள் ஈரான் முழுதும் எதிரொலிக்கின்றன.
ஈரானுக்கு வெளியேயும் கமேனி ஆட்சிக்கு எதிராக வெளிநாடு வாழ் ஈரானியர்கள் போராட்டத்தை துவக்கி உள்ளனர். ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஈரான் துாதரகம் உள்ளது. இங்கு வந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒருவர், துாதரகத்தின் பால்கனியில் ஏறி, ஈரானின் அதிகாரப்பூர்வ கொடியை பிடுங்கி கீழே வீசிவிட்டு, 1979க்கு முந்தைய 'சிங்கம்- - சூரியன்' கொடியை நேற்று முன்தினம் ஏற்றினார்.
அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த ஈரான் முன்னாள் பட்டத்து இளவரசர் ரெசா பஹலவி நேற்று வெளியிட்ட வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது: தெருக்களில் இறங்கி மூன்று நாட்களாக இரவும் பகலும் துணிச்சலுடன் ஈரான் மக்களாகிய நீங்கள் போராடுகிறீர்கள். இதனால், கமேனியின் ஆட்சியும் அவரது அடக்குமுறை இயந்திரமும் பெரிதும் பலவீனமடைந்துள்ளன.பாதுகாப்பு படையினர் பலர் உயிருக்கு அஞ்சி பணியை விட்டு விலகியுள்ளனர். கமேனியிடம் எஞ்சியிருப்பது சில கூலிப்படையினர் மட்டுமே. இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். போராட்டத்தை கைவிடாதீர்கள். நான் விரைவில் நாடு திரும்புவேன்.
