Tamilnadu

நீட்டி முழங்கிய ஸ்டாலின் ஒரே வார்த்தையில் பங்கம் செய்த நயினார் நாகேந்திரன் !

nainar and stalin
nainar and stalin

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் ஆட்சி செய்யும் திமுக அரசாங்கம் தனி தீர்மானம் ஒன்றை இன்று கொண்டுவந்தது, இதனை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார், இது குறித்து சட்டமன்றத்தில் ஸ்டாலின் பேசியதாவது  :-இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) ரத்து செய்யக்கோரி, அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்திருக்கிறார்.


தீர்மானம் குறித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ``ஒன்றிய அரசு கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மை கோட்பாட்டுக்கும், நாட்டில் நிலவிவரும் மத நல்லிணக்கத்திற்கும் உகந்ததாக இல்லை என்றே இந்த பேரவை கருதுகிறது. மக்களாட்சி அடிப்படையில் ஒரு நாட்டின் நிர்வாகம் என்பது, அந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களின் கருத்தினையும் உணர்ந்து அமைந்திருக்க வேண்டும்.ஆனால், இந்த குடியுரிமை திருத்தச் சட்டமானது, வெளிநாட்டிலிருந்து அகதிகளாக வரும் மக்களை அவர்களின் நிலைகருதி அரவணைக்காமல், மத அடிப்படையிலும், அவர்கள் எந்த நாட்டிலிருந்து வருகிறார்கள் என்பதைப் பொறுத்தும் பாகுபடுத்தி பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.எனவே மத நல்லிணக்கத்தை பாதுகாக்க இந்த தீர்மானத்தை கொண்டு வந்து இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக கொண்டுவந்துள்ள CAA எதிர்ப்பு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜக எம் எல் ஏ கள் வெளிநடப்பு செய்தனர், வெளியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் CAA சட்டம் எந்த இந்தியர்களுக்கும் எதிரானது கிடையாது, அனைத்து மதத்தினரையும் மத்திய அரசு பொதுவாக பார்க்கிறது.இந்து பண்டிகைகளான விநாயகர் சதுர்த்தி தொடங்கி, தீபாவளி வரை எந்த எதற்கும் வாழ்த்து கூட சொல்லாத ஸ்டாலின் மதநல்லிணக்கும் குறித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது என குறிப்பிட்டார், மேலும் இந்திய மக்களின் பாதுகாப்பு கருதி எந்த ஒரு சட்டத்தையும் கொண்டுவர பாராளுமன்றத்திற்கும் மத்திய அரசிற்கும் அதிகாரம் உள்ளது எனவும் அதையே பாரத பிரதமர் மோடி செய்திருப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

நீட்டி முழங்கி CAA சட்டத்தை எதிர்க்க காரணம் என ஸ்டாலின் விவரிக்க, இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாத ஸ்டாலின் மத நல்லிணக்கும் குறித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது என ஒரே வார்த்தையில் பங்கம் செய்துள்ளார் நயினார் நாகேந்திரன்.