Cinema

ஒரே வார்த்தையில் "பங்கம் செய்த "  இயக்குனர் மோகன் ஜி!!

Mogan g and ranjith
Mogan g and ranjith

திரைப்பட துறை மொழி எல்லை கடந்து சாதனை செய்துவரும் சூழலில் தற்போது சில நடிகர்கள், இயக்குனர்கள் வேண்டும் என்றே மொழி பிரச்சனையை பெரிதாக்குவது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது, இந்நிலையில் தமிழ் திரைத்துறையை சேர்ந்த இயக்குனர் மோகன் ஜி இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.


இயக்குனர் பா.ரஞ்சித் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது இந்தி தேசிய மொழி என்பது தொடர்பான நடிகர்களின் கருத்து மோதல் குறித்த கேள்விக்கு, "இந்திய அளவில் இந்தி மொழி ஆதிக்கம் அதிகமாக இருப்பதனால் அவ்வாறு நினைக்கின்றனர்.

வட இந்தியா, தென் இந்தியாவைவிடவும். வட இந்தியர்கள் தென்னிந்தியர்களைவிடவும் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது. அதே போல் இந்தி மொழி, பல மாநிலங்கள் சேர்ந்து பேசக்கூடிய ஒரு மொழியாக இருப்பதாலும் அது மேன்மையானது என்று யோசிக்கலாம். ஆனால் அதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லையே. தொடர்ந்து நாம் சண்டை போட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். நாம் அதனை ஒருபோதும் தேசிய மொழியாக ஏற்கப்போவதில்லை.

எனக்கான இணைப்பு மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி இருப்பது தவறில்லை. இந்தியாவில் திராவிடர்களுக்கான முக்கியத்துவம் அவசியம் என்று நான் கருதுகிறேன். திராவிடர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நிற்பது முக்கியமானது என்றும் நான் நினைக்கிறேன்" என்று பதிலளித்தார்.

இந்த சூழலில் இன்று மாலையே பா.ரஞ்சித் இந்தியில் திரைப்படம் இயக்க போவதாக தகவல் வெளியானது இதனை நெட்டிசன்கள் அடடா இதுவல்லவா மொழி பற்று என கிண்டல் அடித்து வருகின்றனர். இந்த சூழலில் இயக்குனர் மோகன் ஜி பா. ரஞ்சித் கருத்தை கிண்டல் அடிக்கும் விதமாக கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார் அதில், 

இந்தி ஏற்க மாட்டோம் ஆனால் இந்தி படங்கள் இயக்க துடிப்போம், இந்தி படிக்க புடிக்காது ஆனால் இந்தி நடிகர்கள், நடிகைகளை தமிழில் நடிக்க வைப்போம், இந்தி பேச புடிக்காது ஆனால் தமிழ் படங்களை இந்தியில் மொழி பெயர்த்து லாபம் அடைவோம்.. தமிழின் பெயரை சொல்லி ஏழை மக்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள்.. இந்திக்கு எதிராக பேசும் எந்த சினிமா பிரபலமும் தங்கள் பிள்ளைகளை தமிழ் மொழி வழி பாடத்தில் படிக்க வைப்பதில்லை அப்படி படிக்க வைப்பவர்கள் இதை பேசட்டும் ஆதரவு தரலாம் என குறிப்பிட்டுள்ளார்.

மொழியை வைத்து அரசியல் பேசும் சிலருக்கு மோகனின் பதில் சரவெடியாக அமைந்துள்ளது.