24 special

மோடி வைத்த செக்..அமெரிக்காவை மண்டியிட வைத்த வர்த்தக போர்! இந்தியாதான் கிங் மேக்கர் - ஓரமாய் நின்று அழும் டிரம்ப்!

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

உலக நாடுகளின் கவனத்தை எப்போதும் கவரும் விஷயம் – அமெரிக்கா மற்றும் இந்தியா உறவுகள்.


இந்தியாவை ஒரு பெரிய சந்தையாகக் கண்டு, தனது பொருட்களை எல்லாம் இங்கு கொட்டி வியாபார வெற்றி காண வேண்டும் என்று கனவு கண்டது அமெரிக்கா.டிரம்ப், இந்தியாவை எளிதில் வளைத்து விடலாம் என்று நம்பினார். “அமெரிக்கவின்  மக்காசோளம் முதல் பெட்ரோல் வரை எல்லாம் இந்தியா வாங்க வேண்டும். இந்தியா எங்களது வாடிக்கையாளராக இருக்க வேண்டும்” என்பதே அவரது திட்டம். ஆனால் அந்த திட்டம் ஆரம்பத்திலேயே தடம் புரண்டது.

அமெரிக்கா விதித்த கடும் வரி, டிரம்பின் கடுமையான பேச்சு – எதுவும் இந்தியாவை பாதிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி ஒரே சொல்லில், “இந்தியா தனது பாதையை மாற்றாது” என்று அறிவித்தார்.

அதற்கு சான்றாக, இந்தியா அமெரிக்காவின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல், ரஷ்யாவிடமிருந்து கூடுதல் எண்ணெய் வாங்கியது. இது உலகத்திற்கு ஒரு பெரிய சிக்னல் – இந்தியா தனது தேசிய நலனை யாருக்கும் விட்டுக் கொடுக்காது என்பதற்கான சான்று.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தை அழுத்தி, “இந்தியாவுக்கு 100% வரி விதியுங்கள்” என்று கேட்டது. ஆனால் ஐரோப்பா, டிரம்பை நம்ப முடியாது என்று உணர்ந்து, இந்தியாவுடன் கைகுலுக்கிக் கொண்டது. இது டிரம்புக்கு மிகப்பெரிய தோல்வியாக காணப்படுகிறது.

இந்தியா மீது அமெரிக்க வரிகள் விதித்தும் , இந்தியாவின் ஏற்றுமதி குறையவில்லை. , ஆசியா, ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா போன்ற புதிய சந்தைகளில் இந்தியப் பொருட்களுக்கு தேவை அதிகரித்தது.  அமெரிக்கா தடை விதித்த பிறகு ஆகஸ்டில் கூட இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சிதான் கண்டது.

இதற்கிடையில், இந்தியா மற்றும் சீனா அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தி, எல்லை மோதல்களை குறைத்துக் கொண்டு புதிய ஒத்துழைப்பு நிலையை உருவாக்கின. இந்தியாவும் சீனாவும் ஒரே மேஜையில் அமர்ந்து பேசுவதை அமெரிக்கா எதிர்பார்க்கவே இல்லை. இந்த நட்பு அமெரிக்காவுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இப்போது அமெரிக்கா தனது பிரதிநிதி மைக்கேல் லீச்சை இந்தியாவுக்கு அனுப்பி பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகிறது. முன்பு கட்டளையிடும் போக்கு காட்டிய அமெரிக்கா, இன்று  கீழிறங்கி கையை நீட்டுகிறது. இது ஒரு வல்லரசுக்கு  சாதரண விஷயம் அல்ல.இந்தியாவும் எந்த அவசரமும் காட்டவில்லை. பி-8 கடல் கண்காணிப்பு விமான ஒப்பந்தம், தேஜாஸ்  உதிரி பாக ஒப்பந்தம் – எதையும் உடனடியாக ரத்து செய்யாமல்,  கிடப்பில் போட்டு மிக நிதானமாக கையாண்டது  இதன் மூலம் உலகத்துக்கு, “இந்தியா ஒருபோதும் பதட்டப்படாது, ஆனால் தனது நலனை காக்கும்”

இந்தியாவின் இந்த உறுதியான, நிதானமாக நடந்து கொண்டதை  – அமெரிக்க வணிக வட்டாரங்களில் பாராட்டைப் பெற்றுள்ளது.“மேலும் இந்திய பிரதமர் மோடி ஒரு திடமான யோசனையாளர். சூழலை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்” என்று அமெரிக்க நிறுவனங்கள் பாராட்டுகின்றன.

இந்திய-அமெரிக்க பேச்சுவார்த்தையில் சில முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. விரைவில் அவை அறிவிக்கப்படலாம். இந்தியாவுக்கே சாதகமான முடிவுகள் அதிகம் இருக்கும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவுக்கு இந்தியாவுடன் நல்ல உறவை வைத்திருப்பது தவிர வேறு வழியில்லை

இந்தியாவின் இன்றைய நிலை சுமாரானது அல்ல.கொரோனா, உக்ரைன் போர், உலக பொருளாதார சிக்கல்கள் – இவ்வளவு பெரிய சோதனைகளிலும் இந்தியாவை திசை தவறாமல் முன்னேற்றி வந்தவர் நரேந்திர மோடி.இந்த நேரத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்திருந்தால், இந்தியா 1990களில் இருந்த பொருளாதார சிக்கலுக்கே மீண்டும் சென்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.மோடியால் தான் இன்று இந்தியா உலக மேடையில் தலையை உயர்த்திக் கொண்டு நிற்கிறது. அவரது வைராக்கியமும், நாட்டுப்பற்றும் – இந்தியாவை வலுவான தேசமாக உலக முன் காட்டுகிறது.