24 special

விசிகவில் மார்ட்டின் லாட்டரி மர்மம்....

thirumavalavan, lottery martin
thirumavalavan, lottery martin

கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி திருச்சியில் வெல்லும் ஜனநாயகம் என்ற மாநாட்டை நடத்தியது இந்த மாநாட்டை வாய்ஸ் ஆப் கமெண்ட்ஸ் என்ற நிறுவனம்தான் ஒருங்கிணைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கூட்டம் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் என பெரும்பான்மையான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுக்கூட்டங்களை வாய்ஸ் ஆப் கமெண்ட்ஸ் என்ற நிறுவனம்தான் ஒருங்கிணைத்து வருகிறது. இந்த ஒருங்கிணைப்பின் நிறுவனராக இருப்பவர் ஆதவ் அர்ஜுனா. இவர் திருச்சியில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில் விசிகவில் இணைந்தார். ஆனால் பல மேடைகளில் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் இவரை பாராட்டி பேசி உள்ளார் மேலும் விடுதலை சிறுத்தைகளின் கூட்டங்கள் பிரம்மாண்டமாக நடப்பதற்கு ஆதவ் மிக முக்கிய காரணமாகவும் இருக்கிறார் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சி வட்டாரங்களில் பேசபடுகிறது.


இப்படி கட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இணைந்துள்ள நிலையில் தற்பொழுது அம்பேத்கர் திடலில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலை குழுவில் துணை பொதுச்செயலாளராக ஆதம் அர்ஜுன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இது விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உள்ள சிலருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.ஏனென்றால் சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உறுப்பினராக சேர்ந்த ஆதவ் தற்போது குறுகிய காலத்தில் கட்சியின் மிகப்பெரிய பதவிக்கு சென்றுள்ளார் என்பதும் நீண்ட காலமாக கட்சிக்கு உழைத்து வருபவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கப்படுவதில்லை என்பதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பல தொண்டர்களின் குமுறலாக உள்ளது. அதுமட்டுமின்றி திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா கூடைப்பந்து விளையாட்டு ஆர்வம் கொண்டவராகவும் மாநில அளவில் ஏராளமான போட்டிகளில் அவர் பங்கேற்று இந்திய கூடைப்பந்து அணிக்காக விளையாடி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்பொழுது தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவராகவும் தமிழக ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளர் என பல முக்கிய பொறுப்புகளில் இருந்து வருகிறார். அதோடு இவர் லாட்டரி அதிபர் மார்ட்டின் மருமகன், தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பொழுது முதல்வர் ஸ்டாலினை லாட்டரி அதிபர் மார்ட்டின் சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரும்பாலான கூட்டங்களில் ஒருங்கிணைப்பு பணியை மேற்கொண்டு வந்த அர்ஜுனா தற்போது உறுப்பினராக சேர்ந்த சில நாட்களிலே துணை பொதுச்செயலாளர் என்ற பதவியை பெற்றுள்ளார் இதன் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நிதி பிரச்சனை ஏற்படாது என்பது திருமாவின் கருத்தாக உள்ளதாக கூறப்படுகிறது.அதாவது தமிழகத்தின் ஆளும் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டிருந்தாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிதி அளவில் பெரும் பிரச்சனைகளையும் சவால்களையும் சந்தித்து வருகிறது.

அதனால் தனது நிதி பிரச்சனையை தீர்ப்பதில் ஒரு முக்கிய பங்கு வகித்து வந்த லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகனிற்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி கொடுப்பதன் மூலம் விடுதலை சிறுத்தைகளின் நிதி பிரச்சனை முடியும் என்பதில் திருமாவளவன் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பொதுத் தொகுதியில் ஆதவ் அர்ஜுனாவிற்கு நிச்சயமாக ஒரு இடம் கொடுக்கப்படும் என்றும் அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது திமுக இரண்டு தொகுதி கொடுத்தால் ஒன்றில் நிச்சயமாக திருமாவளவன் மற்றொன்றில் ஆதவ் அர்ஜுனா இருவரும் பானை சின்னத்தில் போட்டியிடுவார் என்பதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் திட்டமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.