24 special

வாக்கு வங்கி அரசியலால் காணாமல் போன மம்தா போடு 35 நாளில் தலைகீழான அரசியல் காங்கிரஸுடன் இணைய மம்தா முயற்சி

MAMATABANERJEE
MAMATABANERJEE

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில், 15 ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்தியாக இருந்த மம்தா பானர்ஜி தனது சொந்த தொகுதியிலேயே தோல்வியடைந்தார். சட்டவிரோத ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதும், சிறுபான்மையினர் வாக்கு வங்கி அரசியலை மட்டுமே முன்னிறுத்தியதும், பொதுமக்களின் அதிருப்திக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தேர்தல் தோல்விக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸுக்குள் அதிருப்தி வெடிக்கத் தொடங்கியது. பல மூத்த தலைவர்கள், முன்னாள் எம்.பிக்கள், கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் கட்சித் தலைமையை வெளிப்படையாக விமர்சிக்க ஆரம்பித்தனர். 100-க்கும் மேற்பட்ட மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவி விலகியதோடு, பல முக்கிய தலைவர்களும் தங்கள் பொறுப்புகளை ராஜினாமா செய்ததால் கட்சிக்குள் பெரும் விரிசல் ஏற்பட்டது. 


அதோடு கடந்த மாதம் 30ம் தேதி மம்தா பானர்ஜி இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதன் 80 எம்எல்ஏக்களில் 60 பேர் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி ஜூன் 2-ம் தேதி எம்.எல்.ஏக்கள் ரிதபிரதா பானர்ஜி மற்றும் சந்தீபன் சாஹா ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கப்பட்டபோது திரிணாமுல் காங்கிரஸில் மேலும் நெருக்கடி ஏற்பட்டது.  அதோடு அக்கட்சியின் 80 எம்எல்ஏக்களில் 58 பேர் ரிதபிரதா பானர்ஜியை எதிர்கட்சித் தலைவராக ஆதரித்து சட்டமன்ற சபாநாயகரிடம் கடிதம் அளித்தபோது மம்தா பானர்ஜிக்கு மிகப்பெரிய அடியாக கருதப்பட்டது.சபாநாயகரும் அக் கோரிக்கையை ஏற்று ரிதபிரதாவை எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரித்தார். இதனால் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களின் கட்டுப்பாட்டை மம்தா பானர்ஜி இழந்தார். திரிணமுல் காங்கிரசின் 20எம்.பிக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துளார்கள்   

இந்த சூழ்நிலையில், திரிணமுல் காங்கிரசை காங்கிரசுடன் இணைப்பது குறித்து எழுந்த விவாதங்களுக்கு பதிலளித்த மேற்கு வங்க காங்கிரஸ் மூத்த தலைவர் அப்துல் மன்னன், "காங்கிரஸ் தலைமையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. மம்தா பானர்ஜியுடன் கூட்டணி இல்லை. சுத்தமான தண்ணீரில் சாக்கடை நீரை கலந்தால், அது சுத்தமான தண்ணீரையே மாசுபடுத்தும்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அவரது இந்த கருத்து மேற்கு வங்க அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் தோல்விக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள உள்கட்சிப் பூசல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மனோஜ் திவாரி, அருணாவ சென், பாப்பியா கோஷ், ககோலி கோஷ் தஸ்திதார் உள்ளிட்ட பல தலைவர்கள் கட்சித் தலைமைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர். கட்சிக்குள் ஊழல் அதிகரித்துள்ளதாகவும், தலைமையை அணுக முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஒருகாலத்தில் முழு கட்டுப்பாட்டுடன் இருந்த திரிணாமுல் காங்கிரஸ், இன்று உள்கட்சிப் பிரச்சினைகளால் தள்ளாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.