
ஒரு காலத்தில் இந்தியாவில் ராணுவ விமானங்களை தயாரிப்பது என்பது கனவாகவே பார்க்கப்பட்டது. உலகின் முன்னணி நாடுகள் மட்டுமே கொண்டிருந்த அந்த தொழில்நுட்ப திறனை இந்தியா எப்போது அடையும் என்ற கேள்வி பலரிடம் இருந்தது. ராணுவ விமானங்கள் என்றாலே வெளிநாடுகளிடம் வாங்குவது, பராமரிப்புக்குக் கூட பிற நாடுகளை நம்புவது என்ற நிலை நீண்ட காலமாக இருந்தது.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தொடங்கப்பட்ட "மேக் இன் இந்தியா" மற்றும் "ஆத்மநிர்பர் பாரத்" திட்டங்கள் அந்த நிலையை முற்றிலும் மாற்றின. இந்தியா வெறும் வாங்கும் நாடாக அல்ல, உலகத் தர உற்பத்தி மையமாக மாற வேண்டும் என்ற இலக்குடன் பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது
வெளிநாடுகளை எதிர்பார்த்து கொண்டிருந்த அதே இந்தியா தனது சொந்த மண்ணில் தயாரித்த ராணுவ விமானத்தை வானில் பறக்கவிட்டு உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இது வெறும் விமானத்தின் சோதனைப் பறப்பு அல்ல; பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்மநிர்பர் பாரத் கனவு சிறகடித்து பறந்த வரலாற்றுத் தருணம்.
குஜராத்தின் வடோதராவில் டாடா–ஏர்பஸ் உற்பத்தி மையத்தில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய தயாரிப்பு C295 ராணுவ போக்குவரத்து விமானம் வெற்றிகரமாக தனது முதல் சோதனைப் பறப்பை நிறைவு செய்துள்ளது
₹21,000 கோடி மதிப்பிலான இந்த மாபெரும் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படைக்கு 56 C295 விமானங்கள் வழங்கப்பட உள்ளன. அதில் 40 விமானங்கள் இந்திய மண்ணிலேயே தயாரிக்கப்படுகின்றன. இந்திய தனியார் துறையால் தயாரிக்கப்படும் முதல் ராணுவ விமானம் என்ற பெருமையையும் இந்த திட்டம் பெற்றுள்ளது.
71 வீரர்களை சுமந்து செல்லும் திறன், எல்லைப் பகுதிகளில் துல்லியமான செயல்பாடு, மருத்துவ மீட்பு, பேரிடர் உதவி, ராணுவ தளவாட போக்குவரத்து என இந்திய பாதுகாப்புத் துறையின் புதிய சக்தியாக C295 உருவெடுத்து வருகிறது. "இந்தியாவில் முடியாது" என்ற மனநிலையை உடைத்து, "இந்தியாவால் மட்டுமே முடியும்" என்ற புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளார் மோடி. இன்று ஆயிரக்கணக்கான இந்திய பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்த திட்டத்தின் மூலம் உலகத் தரமான விமான உற்பத்தியில் பங்கேற்று வருகின்றன.
பிரம்மோஸ் முதல் C295 வரை, பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் ஒவ்வொரு வெற்றியும் மோடியின் மேக் இன் இந்தியா பார்வையின் பலனாக மாறியுள்ளது. நேற்று விமானங்களை வாங்கினோம்...இன்று விமானங்களை தயாரிக்கிறோம்...நாளை உலக நாடுகளுக்கு வழங்கப் போகிறோம்....இதுதான் மோடியின் இந்தியா...உலகம் கவனிக்கும் புதிய பாரதம்! இனி இந்தியா வாங்கும் நாடு அல்ல... உலகத்திற்கு உருவாக்கி வழங்கும் நாடு!
