24 special

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மீனாக்ஷி அம்மன் கோவில் பள்ளி அறை பூஜை உண்மை வெளிவந்தது...

meenakshi amman temple
meenakshi amman temple

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள, இது மதுரையின் மத்தியில், அமைந்துள்ள சிவன் ஆலயமாகும். இக்கோவில் 2000 முதல் 3000 ஆண்டு காலம் பழமைமிக்கது. இச்சிவ ஆலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். மேலும் இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோவில் என்றும் அழைக்கின்றனர். மேலும் அம்மனை மீனாட்சி, அங்கயற்கண்ணி, தடாதகை பிராட்டி, பச்சைதேவி, மரகதவல்லி, தடாதகை, அபிசேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, கற்பகவல்லி, கோமகள், சுந்தரி, சுந்தரேசுவரி, சுந்தரவல்லி, சொக்கி, சொக்கநாயகி, சோமவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவி, மாணிக்கவல்லி என்றெல்லாம் சிறப்பு பெயர்களும் உண்டு.


இக்கோவிலின் தலவிருட்சம் கடம்ப மரம் ஆகும். மேலும் கோவிலின் தீர்த்தம் பொற்றாமரை குளமும், வைகையாரும், கிருத மாலை தெப்பக்குளம் மற்றும் புறத்தொட்டியாகும். கோவில் திராவிடக் கட்டடக்கலை கலையில் கட்டப்பட்டுள்ளது.அம்பாள் சன்னிதி விக்கிரகம், மரகதக் கல்பச்சைக்கல்லால் ஆனது. அம்பாள் மீனாட்சியின் கருவறையானது, 32 சிங்க உருவங்களும், 64 சிவ கணங்களும், 8 கல்யானைகளும் தாங்கி நிற்கும் அபூர்வமானதாகும். மீன் போன்ற கண்களைப் பெற்றவர் என்பதால், மீனாட்சி என்று பெயர்பெற்றார். மீன், தன்னுடைய முட்டைகளைத் தனது பார்வையாலேயே தன்மயமாக்குவது போல, மீனாட்சி அம்மன், தனது பக்தர்களை, அருட்கண்ணால் நோக்கி அருள்பாலிக்கிறவள். மீனாட்சியம்மன் திருக்கோலத்தில், கிளியும் இடம்பெற்றுள்ளது. மீனாட்சியம்மன்  மதுரையின் அரசியாக இருப்பதால், இவருக்கு நடக்கும் அபிசேகங்களைப் பார்க்க, பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மீனாட்சியம்மனை, அலங்காரம் செய்த பிறகே, பக்தர்கள் பார்க்க முடியும். மேலும் இத்தலத்தில் முதல் பூசை, அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகின்றன. அதன் பின்பே, மூலவரான சிவபெருமானுக்குப் பூசைகள் செய்யப்படும்.

இங்கு அஷ்ட சக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், முதலி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கம்பத்தடி மண்டபம், கிளிக்கூட்டு மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம், திருக்கல்யாண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம்,வீரவசந்தராயர் மண்டபம்,அஷ்ட சக்தி மண்டபம் என்று பல மண்டபங்களை உள்ளது.மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில், முடிசூட்டுவிழா, திக்குவிசயம், திருக்கல்யாணம், தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், இந்தக் கோயிலில், தமிழ் மாதம் ஒவ்வொன்றிலும் சிறப்பு விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதிலும் சித்திரை திருவிழா மிகவும் பெரிய அளவில் கொண்டாடப்படும் திருவிழாவாகும்.  இந்த நிலையில் மீனாட்சியம்மன் குறித்த சுவாரசியமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறது. அதில் அர்த்த ஜாம பூஜையில் அம்மன் வெண்பட்டு உடுத்தி கோடான கோடி அழகுடன் காட்சியளிப்பார். 

அவள் பாதங்கள் தாமரை இதழ்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். சிவபெருமான் இப்போது புறப்பட்டு வருவார் அவரின் பாத கமலங்களுக்கு ஆராதனைகள் செய்யப்படும். இவர் வெளியில் நிற்கும்போது அம்பாளுக்கு பூஜை நடக்கும். அதன் பின் சிவன் பள்ளியறைக்குள் செல்வார். இதைப் பார்ப்பவர்களுக்கு திருமணத்தடை நீங்குமாம், பிள்ளை வரம் கிடைக்குமாம், மேலும் பிரிந்த குடும்பங்கள் மீனாட்சி அம்மனுடைய ஸ்தலத்திற்குள் நடைபெறுகின்ற பள்ளியறை பூஜை மற்றும் அர்த்த ஜாம பூஜையில் பங்கேற்றால் பிரிந்த தம்பதியர்களும் குடும்பங்களும் ஒன்று  சேர்வார்களாம்! இப்படிப்பட்ட அற்புதங்களை செய்யக்கூடிய மீனாட்சியம்மனின் அருள் நிறைந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.