24 special

பிரியாணிக்கு சீறிய சிறுத்தைகள்... பெட்டி பாம்பாக அடக்கிய மாவட்ட ஆட்சியர்... மொத்தமும் போச்சு !

thirumavalan
thirumavalan

ஆம்பூர் பிரியாணி திருவிழா சர்ச்சை உண்டான போது தமிழகத்தை சார்ந்த முன்னணி ஊடகங்கள் வாய் திறக்காத போது முதல் முறையாக களத்தில் நின்று செய்தியை வெளியிட்டது நமது TNNEWS24 டிஜிட்டல் குழு, அதனை பார்க்க கிளிக்.


ஆம்பூரில் பிரியாணி திருவிழா நடத்த கூடாது எனவும் அரசிற்கு கவனம் செலுத்த ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும் போது இதில் ஏன் கவனம் செலுத்த வேண்டும் எனவும் இந்து முன்னணி சார்பில் நமக்கு பேட்டியளித்த கோட்ட பொறுப்பாளர் மகேஷ் ஆட்சியர் உடனடியாக ஆம்பூர் பிரியாணி திருவிழாவை தடை செய்யவேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த சூழலில் திடீர் என விடுதலை சிறுத்தைகள் மற்றும் இன்னும் பிற இயக்கங்கள் ஆம்பூரில் நடைபெறும் பிரியாணி திருவிழாவில் மாட்டு இறைச்சி பிரியாணியும் இடம்பெற அனுமதி அளிக்கவேண்டும் என கோதாவில் குதித்தன, என்னதான் அவர்கள் ஆர்ப்பாட்டம் போராட்டம் என செய்தாலும் மாவட்ட ஆட்சியர் சட்டை செய்யவில்லை.

இந்த சூழலில் தான் நாளை நடைபெறும் பிரியாணி திருவிழாவில் இலவசமாக மாட்டு இறைச்சி பிரியாணியை கொடுப்போம் என இந்த இயக்கங்கள் விடுதலை சிறுத்தைகள் போன்றவை தெரிவித்தன, அப்படி இருக்கையில் இந்து முன்னணி சார்பில் பேசிய மகேஷ் பீப் பிரியாணிக்கு அனுமதி கொடுத்தால் நாளை பன்றி கறி பிரியாணிக்கும் அரசு அனுமதி அளிக்குமா?

அவ்வாறு செய்தால் பிரச்சனைகள் உண்டாகாதா என கேள்வி எழுப்பினார் இந்த சூழலில் தான் மாவட்ட ஆட்சியர் பிரியாணி திருவிழாவை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளார் இந்து முன்னணி வலியுறுத்தியது போன்றே இப்போது பிரியாணி திருவிழா நடக்கவில்லை, அதே நேரத்தில் இந்த பிரியாணி திருவிழாவிற்கு மிக பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் ஆம்பூர் வந்த பல முதலாளிகள் குறிப்பாக அரபு ஸ்டைல் முதலாளிகள் விழா தடை பட்ட காரணமாக அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.மாட்டு இறைச்சி பிரியாணிக்கு சீறிய சிறுத்தைகளால் இப்போது மொத்த பிரியாணி விழாவும் தடை பட்டு நிற்கும் நிலை உண்டாகி விட்டது.