24 special

IB மற்றும் ராவுக்கான தலைவர்கள் பதவி காலியாகிறதா..?

modi
modi

புதுதில்லி : ரா மற்றும் IB தலைவர்களான அரவிந்த் குமார் மற்றும் சமந்த்குமார் கோயல் ஆகியோரின் பதவிகாலம் வருகிற 2022 ஜூன் 30 அன்றுடன் நிறைவடைகிறது. இதனால் உளவுத்துறை மற்றும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவான ரா ஆகிய இரு முதன்மை உளவு அமைப்புகளுக்கான உயர்பதவிகளுக்கான போட்டி தொடங்கியுள்ளது.


உளவுத்துறை தலைமை பதவிக்கு 1987 பேட்சை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளான ஏ.எஸ் ராஜன், ஸ்வகத் தாஸ் மற்றும் 1988 பேட்சை சேர்ந்த அதிகாரிகளான மனோஜ் யாதவ், அனிஷ் தயாள் சிங் மற்றும் தபன் தேகா  ஆகியோர் தலைமை பதிவுக்கான பெயர்பட்டியல் பரிசீலனையில் உள்ளனர். உள்நாட்டு உளவு அமைப்பின் செயல்பாடுகளை நன்கு அறிந்தவர்கள் இந்த துறைகளில் திறமையானவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1989 பேட்ச் அதிகாரிகள் பரிசீலனையில் இதுவரை இல்லை என்றாலும் ஷபி அஹ்சன், ராகுல் ரஸ்கொத்ரா மற்றும் விவேக் ஸ்ரீவத்சவா ஆகியோர் பட்டியலில் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. ரா மற்றும் உளவுப்பிரிவு தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் டெல்லி, வடகிழக்கு மாநிலம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் உள்ள இரட்டை உளவுத்துறை நிறுவனங்களில் உயர்பதவிகளில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னர் வரவிருக்கும் இரண்டாண்டுகளில் உள்நாட்டு மற்றும் வெளிப்புற பாதுகாப்பு சவால்களில் மத்திய அரசு முக்கிய கவனம் செலுத்த உள்ளது. பிரதமர் மற்றும் உள்துறைஅமைச்சரை கொண்ட உயர்மட்ட நியமன குழு அமைப்பு தகுதியானவரை தேர்ந்தெடுக்கும் என தெரிகிறது.