24 special

கிட்னி திருட்டு.. தி.மு.க அரசை அதிர வைத்த மத்திய அரசு டீம்! தமிழக அரசியலை புரட்டி போடும் மர்மம் வெளியானது!

PMMODI,MKSTALIN
PMMODI,MKSTALIN

தமிழகத்தை தற்போது உலுக்கியுள்ள சம்பவம் கிட்னி திருட்டு ஆகும். குறிப்பாக இந்த திருட்டில் ஆளும் கட்சியான திமுகவினர் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், காவேரி ஆர்.எஸ், அன்னை சத்தியா நகர், குமாரபாளையம், வெப்படை சுற்று பகுதிகளை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்களை குறி வைத்து அவர்களது வறுமைநிலையை பயன்படுத்தி கொள்ளும் கிட்னி விற்பனை கும்பல், அறுவை சிகிச்சை மூலம் கிட்னியை விற்பனை செய்து 10லட்சம் ரூபாய் வரை பெற்று தருவதாக கூறி தொழிலாளர்களை மூளை சலவை செய்துள்ளனர்.பின் ஈரோடு, பெரம்பலூர், திருச்சி, கொச்சின், பெங்களூரு போன்ற இடங்களில் செயல்படும் தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று கிட்னியை விற்பனை செய்கின்றனர். ஆனால் பேசிய தொகையை தராமல் 5 லட்சம் ரூபாய் வரை மட்டுமே இடைத்தரகர்கள் வழங்குவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.


இந்த நிலையில் கிட்னி விற்பனை குறித்தான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. குறிப்பாக இது ஆளும் கட்சியினரிடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.  கிட்னி திருடும்  இந்த சம்பவம் புலன் விசாரணை படத்தில் வருவதை போன்று ஏழை எளிய மக்களுக்கு பணத்தாசை காட்டி கிட்னி  மாற்றம் நடந்துள்ளது. இந்த கிட்னி திருடும் சம்பவத்திற்கு அன்னை சத்யா நகரை சேர்ந்த ஏஜன்ட் திமுக கழக பேச்சாளர்  திராவிட ஆனந்தன் என்பவர் மூளையாக செயல்பட்டுள்ளார். ஏழை மக்களை ஏமாற்றி 10 லட்சத்தில் ரூ. 5 லட்சம் மட்டும் கொடுத்து மீதியை தராமல் ஏமாற்றியுள்ளார். இதனை தொடர்ந்து திரவிட ஆனந்தன் என்பவர் குறித்து ஒரு பெண் பேசிய வீடியோ வெளியாகி வைரலானது இதனை தொடர்ந்து விஷயம் பெரிதானது. 

இதனை தொடர்ந்து தமிழக சுகாதர துறை  விசாரணையில் இறங்கியது இதில் திருச்சியை சேர்ந்த சிதார் மருத்துவமனை, திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் மருத்துவனை மற்றும்அபிராமி மருத்துவமனை உள்ளிட்டவை கிட்னி திருட்டு புகாரில் சிக்கியுள்ளது. இதில் அபிராமி மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி திருச்சி, பெரம்பபலூர், தஞ்சாவூர் சுற்று வட்டார மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர் போலீசார்  கிட்னி விலை பேசிய ஏஜன்டுகளையும், மருத்துவ குழுவினர் எப்படி ஆதாரில் பெயர் மற்றும் முகவரி மாற்றம் செய்து கிட்னியை எடுத்தார்கள் என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். , மேலும், இது குறித்து மத்திய அரசின் மருத்துவகுழுவினரும் பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் விசாரணை நடத்த தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்வபம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நோயாளிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிட்னி விற்பனையில் ஈடுபட்டு தலைமறைவாகியிருக்கும் திராவிட ஆனந்தனை பிடிப்பதற்காக பள்ளிப்பாளையும் காவல் ஆய்வாளர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்திய நிலையில், இந்த நிலையில், நாமக்கல் கிட்னி விற்பனை தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்திவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.. இதில் சிக்கியுள்ள திமுக எம்எல்ஏவின் தனலட்சுமி மாறுதுவக்கல்லூரி மீது ஏற்கனவே பல புகார்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த இந்த மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.