
சினிமா பிரபலங்களை போன்று தற்போது youtube பிரபலங்களும் அதிக ரசிகர்களை கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஒரு ஃபுட் வ்லாகராக தனது youtube சேனலை தொடங்கி இன்று பல முன்னணி ஹீரோ ஹீரோயின்களை பேட்டி எடுத்து அதன் மூலமும் எக்கச்சக்க பணத்தை சம்பாதித்து வருபவர் தான் youtube பிரபலம் இர்பான். அதாவது முதலில் தனது youtube சேனலை தொடங்கி பல ஹோட்டலுக்கு சென்று அங்கு பிரத்தியேகமாக இருக்கும் உணவுகளை ருசித்து பார்த்து அது குறித்த தகவலையும் தனது விருப்பத்தையும் கூறி வந்தார். இதன் மூலம் பல சப்ஸ்க்ரைபர்களையும் பாலோவர்சையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பெற்று வந்த இர்பான் மிக முக்கியமான யூடுப் பிரபலமாகவும் மாறியுள்ளார். இதனை அடுத்து சமீப காலமாக தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர் நடிகர்களை பேட்டி எடுத்து அதன் மூலமாகவும் அதிக பாலோவர்சை பெற்று வருகிறார். முன்னதாக சில விமர்சனங்களை அவ்வப்போது பெற்று வந்த இர்ஃபான் தனது திருமணத்தின் பொழுது உச்சகட்ட விமர்சனத்தை சந்தித்தார்.