Politics

எம் பி பதவியை ராஜினாமா செய்கிறார் கனிமொழி டபுள் கேம் ஆட்டத்தால் முடிவு!!

எம் பி பதவியை ராஜினாமா செய்கிறார் கனிமொழி டபுள் கேம் ஆட்டத்தால் முடிவு!!
எம் பி பதவியை ராஜினாமா செய்கிறார் கனிமொழி டபுள் கேம் ஆட்டத்தால் முடிவு!!

திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தால் எம். பி பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், இடை தேர்தலில் போட்டியிட்டு அமைச்சராக இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசு பொருளாக இருக்கிறது.


தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தல் முடிவுகள் வருகின்ற மே 2 அன்று எண்ணப்படுகின்றன, இதில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது, இந்நிலையில் திமுக எடுத்த அனைத்து தேர்தலுக்கு பிந்தைய சர்வேகளிலும் திமுக 160 இடங்களுக்கு குறையாமல் வெற்றி பெரும் என்று உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாம்.

இதையடுத்து அடுத்து ஆட்சி அமைப்பதற்கு தேவையான அனைத்து முயற்சிகளிலும் திமுக தலைமை இறங்கியுள்ளது, இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் தனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்ற கனிமொழி ஸ்டாலினிடம் தெரிவித்து இருக்கிறாராம்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெரும், அமையக்கூடிய புதிய ஆட்சியில் திமுகவும் அமைச்சரவையில் பங்குபெறும் எனவும் அதில் கனிமொழிக்கு முக்கிய பதவி பெற்று தர இருப்பதாக ஸ்டாலின் கனிமொழியிடம் உறுதி அளித்து இருந்தாராம்.

ஆனால் பாஜக அரிதி பெரும்பான்மை பெற்று முன்பை காட்டிலும் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது, எனவே கனிமொழியின் மத்திய அமைச்சர் கனவு பொய்த்து போனதால் வேறு வழியின்றி மாநில அமைச்சரவையில் பங்கு கொள்ள கனிமொழி முடிவு எடுத்து இருப்பதாகவும், உதயநிதியை முன்னிலை படுத்த தன்னை அரசியலில் இருந்து ஓரம்கட்ட நினைப்பதாகவும், தான் அமைச்சர் ஆனால் மட்டுமே தொடர்ந்து கட்சியிலும் ஆட்சியிலும் தனக்கு பிடிமானம் இருக்கும் என கனிமொழி நம்புவதாகவும் கூறப்படுகிறது.

திமுக ஆட்சிக்கு வருகிறதா இல்லையா என தெரிவதற்கு முன்பே அமைச்சர் பட்டியலை வைத்து ஸ்டாலின் குடும்பத்திற்குள் நடைபெறும் குழப்பம் பெரும் அதிர்ச்சியை திமுக தொண்டர்களுக்கு கொடுத்துள்ளது.