24 special

இன்னும் ஓரே வருடம் தான் விஜயை வைத்து அமித்ஷாவின் மெகா ஸ்கெட்ச் டெல்லியின் ஆக்சன் மோட் அலறும் திமுக

VIJAY,AMITSHA
VIJAY,AMITSHA

டெல்லியின் உயர் அதிகார வட்டாரங்கள் தமிழகத்தை நோக்கி கூர்மையாக கவனித்து வருகின்றன. சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 144 வாக்குகளுடன் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இது வெறும் ஆட்சித் தக்கவைப்பு அல்ல… தமிழக அரசியலை அடியோடு மாற்றும் மாஸ்டர் ஸ்ட்ரோக். என்று பார்க்கப்படுகிறது. எடப்பாடி அணியின் எதிர்ப்பை மீறி 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் விஜய்க்கு ஆதரவு அளித்ததன் மூலம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் பேரம் பேசும் சக்தி முற்றிலுமாக முடக்கப்பட்டுவிட்டது. இனி விஜய் எந்த நிபந்தனைக்கும் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை


இந்தப் பின்னணியில் தான் தமிழகத்தை நோக்கி அமலாக்கத்துறை படையெடுக்கத் தயாராகி வருகிறது என்ற தகவல்கள் வலுவாகக் கசிந்து வருகின்றன. கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற பெரும் டெண்டர் ஊழல்கள், மணல் குவாரி முறைகேடுகள், அரசுத் துறைகளில் நடந்த பல கோடி ரூபாய் முறைகேடுகள், பணமோசடி விவகாரங்கள் உள்ளிட்ட அனைத்தும் மீண்டும் தீவிர விசாரணைக்கு உள்ளாகப் போகின்றன. தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குகளைப் பதிவு செய்து, விஜய் அரசு ஏற்கெனவே அமைத்துள்ள தனிப்படையுடன் மத்திய அமலாக்கத்துறையும் இணைந்து செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவின் முன்னணி தலைவர்கள், முக்கிய முன்னாள் அமைச்சர்கள் மீதான பழைய பணமோசடி மற்றும் ஊழல் வழக்குகள் அனைத்தும் மீண்டும் தீவிரப்படுத்தப்படும். விரைவில் பல முக்கிய புள்ளிகளின் வீடுகள், அலுவலகங்கள், உறவினர்கள் இடங்களில் அதிரடி சோதனைகள் நடைபெறும் என்று டெல்லி உயர் வட்டாரங்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றன.

விசாரணைக்கு ஒத்துழைக்காத பட்சத்தில் கைது நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெறும் என்பது உறுதியான தகவலாக உள்ளது. ஒருவேளை விஜய் அரசு இந்த நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தவறினால், அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதும் நிதர்சனமான உண்மை. ஊழலை ஒழிப்பேன், தீய சக்திக்கு மாற்று சக்தி நான்தான், தூய சக்தி என்ற பஞ்ச் டயலாக்குகள் அனைத்தும் பஞ்சராகிவிடும் அபாயம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், கரூர் சம்பவம் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் இன்னும் சிபிஐ கையில் உள்ளன. திமுக தரப்பில் வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், எது நடந்தாலும் டெல்லிக்கு சாதகமான சூழலே உருவாகும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஒரே கல்லில் நான்கு மாங்காய் அடித்த மாதிரி டெல்லி வட்டாரம் செயல்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின்  ஆட்சி,  அதிமுக பிளவு திமுக ஆட்டம் ஓவர் , காங்கிரஸ் க்கு மிகப்பெரிய அடி  என நான்கு மாங்காய் அடித்துள்ளது. அமலாக்கத்துறையின் நுழைவு, திமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தப் போகிறது.  டெல்லி ஸ்டைலில் ஆக்சன் மோட் உச்சக்கட்டத்தைத் தொடும். ED is Coming! திமுகவுக்கு இது Game Over போல் தெரிகிறது.