24 special

தென்மாவட்டத்தில் கொடி கட்டி பறக்கும் ஜான் பாண்டியன்... கள நிலவரம் என்ன சொல்கிறது..!

Krishansami, John pandiyan
Krishansami, John pandiyan

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்.,19ம் தேதி முதல் தொடங்கவுள்ளது, இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் தேர்தல் களம் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் நிலையில், தென் காசி தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.


பாஜக கட்சியை பொறுத்தவரை தென் மாவட்டங்களில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்றே சொல்லாம். அந்த அளவுக்கு கள பணிகள் செய்துள்ளனர் பாஜகவினர். திமுக சார்பாக அங்கு ராணி என்பவர் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியும், பாஜக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் போட்டியிடுகிறார். ஒரே சமூகத்தை சேர்ந்த இருவர் போட்டியிடுவதால் அந்த ரேஸில் யார் வெற்றி பெறுவார் என்பது மக்களிடத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காங்கிரஸ் கடந்த முறை வெற்றி பெற்றது, இந்த முறை திமுக போட்டியிடுகிறது.

இதனால், நேரடியாக மக்களிடத்திலும் டிஜிட்டல் முறையிலும் பிரச்சாரம் செய்து வரும் பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் இணையத்தில் ஒரு வீடியோ பகிர்ந்துள்ளார். அதில், திமுக சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது கூட்டுறவு வங்கியில் ஐந்து சவரன் நகை வாங்கினால் நாங்கள் தள்ளுபடி என்றும் நாளைக்கே நீங்கள் உங்கள் நகைகளை அடமானம் வையுங்கள் என கூறினார். ஆனால், தள்ளுபடி ஏதும் செய்யவில்லை. இதற்கு பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் மக்களே அவர்கள் சொல்றதை கேட்டு நகைகளை அடமானம் வைத்தீர்கள் இதுவரை தள்ளுபடி செய்யவில்லை. தொடர்ந்து பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வரும் திமுக நம்பி நீங்களும் ஏமாந்து போய்கிறீகள். இப்படி பொய் சொல்லும் திராவிட கட்சிகளுக்கு உங்கள் ஓட்டு..? நல்லது செய்கிறேன் பிரதமரால் தேர்தெடுக்கப்பட்ட வேட்பாளர் எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்டு கொண்டார்..

தொடர்ந்து களத்தில், தேவேந்திர குல சமுக மக்கள் பாஜகவை தேர்தெடுப்பதாக கூறப்படுகிறது. காரணம் தனது சமூகத்திற்கு பிரதமர் மோடியினால் அங்கீகாரம் கிடைத்துள்ளதும் என்றும் தென்காசி பகுதிகளில் நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க பாஜக படுபடுவதாகவும் வாக்குறுதி கொடுத்துள்ளார் பாஜக வேட்பாளர். இது மத்திய அரசு தேர்தெடுப்பதால் மோடிக்கே வாய்ப்பளிக்கலாம் என்றும் திமுகவுக்கு ஓட்டு போட்டால் எப்படியும் காங்கிரஸ் கட்சி பல இடங்களில் அழிந்து வருவதால் அதற்கான ஓட்டு டம்மி என்று கூறப்படுகிறது. 

அதிமுக தனது பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியாத சூழ்நிலையும் உருவாகியுள்ளது. மேலும், பிரதமர் திட்டம் தமிழகத்தில் கிடைக்க பாஜகவை தேர்ந்தெடுக்க முன் வந்துள்ளனர் மக்கள். ஜான் பாண்டியன் தீவிரமாக களத்தில் இருந்தும் டிஜிட்டல் திண்ணையிலும் கொடி கட்டி பறக்கிறார். களத்தில் அவரது குடும்பங்கள் நேரடியாக மக்களிடம் பிரச்சாரம் செய்து  வருகின்றனர். அது போல் சமீபத்தில் ஜான் பாண்டியனை ஆதரித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ரோடு ஷோ நடத்தி மக்களை கவர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.