24 special

1000 கோடி ஊழல் சொல்லி ஒருநாள் ஆகல... திருப்பரங்குன்றம் மலையில் புதிதாக பறந்த பிறை கொடி.. இப்போ தெரிகிறதா திமுக யாரென்று

MKSTALIN,
MKSTALIN,

மதுரை திருப்பரங்குன்றத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை எழுகின்றது அது பிறை நிலா கொண்ட கொடி இந்துகோவிலுக்கு சொந்தமான இடத்தில் பறப்பது எனும் பத்திரிகை செய்திஇங்கு தமிழக அரசுதான் ஒருதலைபட்சமாக நடந்து பெரும் குழப்பங்களை விளைவிக்க துணைபோகின்றதோ எனும் சந்தேகம் எழுகின்றது அல்லது ஒரு மூன்றாம் தரப்பு அதாவது இஸ்லாமியரும் இந்துக்களும் அல்லாத ஒரு மூன்றாம் தரப்பு இந்த சதிசெயலுக்கு திட்டமிடுகின்றது என்ற சந்தேகமும் எழுந்துள்ளது மேலும் திமுக மீது ஊழல் 1000 கோடி ஊழல் குற்றசாட்டு பூதாகரமாக வெடித்துள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை முறைகேடு தொடர்பாக விசாரிக்கச் சொல்லி, தமிழக டி.ஜி.பி-க்கு அமலாக்கத்துறை மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. கடந்த முறையைவிட இந்த முறை சற்றுக் கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்தி யிருக்கிறது அமலாக்கத்துறை. ‘டெண்டர்கள் ஒதுக்கியதிலும், பணி நியமனங்களைச் செய்ததிலும், நபார்டு மூலமாகச் செய்யப்பட்ட பணிகளுக்கும் கூட லஞ்சம் பெற்றிருக்கிறார்கள். 


இப்படி, 1,020 கோடி ரூபாய்க்கு லஞ்சம் கைமாறியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. எங்கள் புகாரின்மீது வழக்கு பதிவுசெய்யவில்லை என்றால், லஞ்சம் வசூலித்ததில் போலீஸுக்கும் தொடர்பு என்ற முடிவுக்கு வரவேண்டியதிருக்கும்’ என்று எச்சரித்திருக்கிறது அமலாக்கத்துறை. இதுவரையில், அமலாக்கத்துறையின் புகார்மீது வழக்கு பதியவில்லை லஞ்ச ஒழிப்புத்துறை. வழக்கு பதியச் சொல்லி நீதிமன்றத்துக்கு இந்த விவகாரம் செல்லும்பட்சத்தில், அமலாக்கத்துறை உரிய  உத்தரவைப் பெற்று நேரு மீது நடவடிக்கை எடுக்கலாம் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கிறது. மழை,வெள்ளம் பாதிப்பு, ஊழல் குற்றசாட்டுகளை மறைக்கவே திமுக நாடகம் போடுகிறத என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு மிகபெரிய நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரமிது , 144 விதித்து பரபரப்பான காட்சிகள் நடக்கும் நேரம் இந்த கொடி எப்படி வந்தது? எதற்காக  செய்யும் திட்டமா? என்பதெல்லாம் யோசிக்கும் போது தமிழக காவல்துறை கடமையில் இருந்து தவறி எதற்கோ வழிவிடுவதாகவே தோன்றுகின்றது என குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. தீபமேற்ற விடமாட்டோம் ஆனால் பிறைகொடி பறக்க அனுமதிப்போம் என்பது எபப்டி சரியாகும் என்பது தெரியவில்லை, 

 'மதுரை திருப்பரங்குன்றம் மலையில் கோயில் இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில், நிலா பிறை போட்ட கொடி புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதனை அகற்ற வேண்டும்' என சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகத்திடம் ஹிந்து மக்கள் கட்சியினர் புகார் அளித்தனர்.மாவட்ட தலைவர் சோலைகண்ணன் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவித்திருப்பதாவது: கோயில் மலை மீது பழமையான தலைவிரிச்சான் மரம் என்று அழைக்கப்படும் கல்லத்தி மரம் உள்ளது. இங்கிருந்து 100 மீட்டருக்கு மேல் தர்கா உள்ளது. சந்தனக்கூடு விழாவின்போது ஆண்டுக்கு ஒருமுறை தர்காவுக்கு உள்ளே உள்ள கொடிமரத்தில்தான் நிலா பிறை போட்ட சிவப்புக்கொடி ஏற்றப்படும்.

இந்த நிலையில் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் மகா தீபம் ஏற்ற ஆட்சேபனை தெரிவிக்காத தர்கா நிர்வாகத்திற்கு கட்சி சார்பில் நன்றி. அதேசமயம் கோயில் இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தை ஆக்கிரமிக்கும் நோக்கோடு தர்கா நிர்வாகம் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. டிச.,21ல் சந்தனக்கூடு விழாவில் கல்லத்தி மரத்தில் உள்ள கொடியை இறக்கி மீண்டும் ஏற்ற தர்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதை காரணம் காட்டி மரமும் தர்கா நிர்வாகத்திற்கு சொந்தம் என உரிமை கொண்டாடும் விதமாக வருங்காலத்தில் சர்ச்சையாகவும், பிரச்னையாகவும் மாற வாய்ப்புள்ளது. எனவே கல்லத்தி மரத்தில் உள்ள கொடியை ஆரம்பநிலையில் உடனே அகற்ற வேண்டும். மரத்தில் சேவல் படம் போட்ட கொடியை ஏற்ற வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.