India

பிஜேபிக்கு வலுசேர்க்கிறாரா ராகுல்..? விழுந்த ஒரு விக்கெட்! பாஜக சொன்னது சரிதானா?

Rahul gandhi and bjp
Rahul gandhi and bjp

கர்நாடகா : ராகுலை நெட்டிசன்கள் செல்லமாக பாஜகவின் பிரச்சார பீரங்கி என அழைப்பதுண்டு. அதை நிரூபிப்பது போல தவறான தகவலை மக்களிடம் பரப்பிவிட்டு பின்னர் நீதிமன்றத்தில் சென்று மன்னிப்பு கேட்பது வாடிக்கை. ரபேல் விமானம் குறித்து தவறான தகவலை கூறிவிட்டு பின்னர் குஜராத் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டது வரலாறு.


அதேபோல காங்கிரஸ் தலைவர்களும் அடுக்கடுக்கான அபாண்டமான தகவலை அள்ளிவிடுவதுண்டு. அந்த வரிசையில் மேற்குவங்க காங்கிரஸ் மாநில தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பிரதமரின் தனிப்பட்ட விமானத்தில் நீச்சல் குளம் இருக்கிறது என ஒரே போடாக போட்டார். இப்படி முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அறிக்கையாக வெளியிடுவதால் காங்கிரசில் இருக்கும் பல நல்ல தலைவர்கள் கட்சியை விட்டு விலகி வருகின்றனர்.

மிக சமீபத்தில் குஜராத் காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விலகிய அன்றே பிஜேபியில் இணைந்தார். அதைத்தொடர்ந்து நேற்று மாலை கர்நாடக மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் பிரமோத் மத்வராஜ் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் பிஜேபியில் இணையலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தனது ராஜினாமா கடிதத்தில் இதுகுறித்த விளக்கத்தை அளித்துள்ளார்.

சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக பணியாற்றிய அவர் 2018 சட்டமன்ற தேர்தலில் உடுப்பியில் போட்டியிட்டு தோலிவியடைந்தார். மேலும் அவர் கேபிசிசி தலைவர் டி.சிவகுமாரிடம் அளித்த ராஜினாமாவில் " உடுப்பி காங்கிரசில் நிலைமை மாறிவிட்டது. அது என்னை மூச்சு திணறவைத்துவிட்டது. 

உடுப்பி காங்கிரசில் நிலவும் சூழல் குறித்து கூறியும் அதை நிவர்த்தி செய்ய எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் எனக்கு வழங்கப்பட்ட புதிய மாநில துணைத்தலைவர் பதவியில் நியாயமாயிருப்பது முடியாத காரியம். அதனால் அந்த பதவியை ஏற்கப்போவதில்லை. என்னால் இனி காங்கிரசில் தொடர முடியாது" என தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து முக்கிய தலைவர்கள் மற்றும் இளம் நிர்வாகிகள் தொடர்ந்து ராஜினாமா செய்துவருவது காங்கிரசை மேலும் சரிவுக்குள்ளாக்கி வருகிறது. சமீபத்தில் ஜார்கண்டில் 11 தலைவர்கள் மொத்தமாக காங்கிரசில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.