24 special

முதல்வர் டேபிளுக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட் டென்ஷனில் பிபி எகிறிய முதல்வர்!

MKSTALIN, PMMODI
MKSTALIN, PMMODI

திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என தமிழக அரசியலில் உள்ள முக்கிய கட்சிகள் லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரங்களை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதோடு சில கட்சிகளின் பிரச்சாரங்கள் அனைத்தும் திருவிழாக்களை போன்றும் திருவிழாவிற்கு வரும் கூட்டங்களை போன்றும் அமைந்துள்ளது. அந்த வகையில் பாஜகவின் வேட்பாளர்கள் முன்வைக்கும் பிரச்சாரங்களை பார்க்கும் பொழுது மக்களின் அலை அதிகமாக காணப்படுகிறது. மத்திய அமைச்சரான ராஜ்நாத் சிங் சமீபத்தில் தமிழகத்திற்கு வருகை புரிந்து பாஜக வேட்பாளர்கள் சார்பாக பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். மேலும் பாஜகவின் தேசிய தலைவர் நட்டா, பிரதமர் நரேந்திர மோடி என ஸ்டார் தலைவர்களாக உள்ளவர்கள் தமிழகத்திற்கு வருகை புரிந்து தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முன்பில்லாத வகையில் தமிழகம் முழுவதும் பாஜகவின் வளர்ச்சியானது உயர்ந்துள்ளது என்பதற்கு சான்றாகவே அதிக அளவிலான மக்கள் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பதை கள நிலவரம் தெரிவிக்கிறது.


                                                                                                    

எப்படி பாஜகவிற்கு செல்லும் இடங்களில் பெருமளவிலான வரவேற்புகள் இருக்கிறதோ அதற்கு நேர்மாறான சூழ்நிலை திமுகவிற்கு நிலவி வருகிறது. தேர்தலுக்கு முன்பாகவே கடும் பின்னடைவை சந்தித்திருந்த திமுக தேர்தலில் ஸ்டார் பேச்சாளர்களை இறக்கி தேர்தலுக்கான வியூக அமைப்பாளரையும் இறக்கி தேர்தலில் வெற்றி கண்டு விடலாம் என்ற ஒரு மனக்கணக்கில் இருந்தது ஆனால் அந்த கணக்கு வெறும் மனக்கணக்காகவே போனது! ஏனென்றால் தற்போது தமிழகத்தின் பெருவாரியான மக்கள் மற்றும் பெரும்பகுதிகள் திமுகவின் வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்காக வாக்கு சேகரிக்க சொல்லும் பொழுது மக்கள் அவர்களை மறைமுகமாக அல்ல நேராகவே எதிர்க்கிறார்கள் நேராகவே கேள்வி கேட்கிறார்கள்... ஆனால் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை அதனால் மக்களும் அவர்களை தங்களது பகுதிக்குள் அனுமதிக்கவே எதிர்ப்பு தெரிவித்து திருப்பி அனுப்பி விடுகிறார்கள். இப்படி ஒரு சூழ்நிலை இருப்பதை பார்க்கும் பொழுது கடந்த தேர்தலைப் போன்று திமுகவால் இந்த முறை நிச்சயம் பெருமளவிலான வெற்றியை காண முடியாது என அரசியல் விமர்சகர்கள் கருது தெரிவித்து வருகிற நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு உளவுத்துறையின் ரிப்போர்ட் ஒன்று பறந்துள்ளது. 

                                                                                                                          

அதனைப் பார்த்த பிறகு முதல்வர் தலையில் கை வைத்து எதுவும் புரியாமல் திணறி வருகிறார். அதாவது முதல்வர் 40 தொகுதியும் நமதே என்ற வகையில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் ஆனால் உண்மையான கள நிலவரம் அப்படியல்ல கடந்த முறை அதிமுகவின் கூட்டணியில் பாஜக இருந்த பொழுது 39 தொகுதிகளை திமுக கைப்பற்றியது, ஆனால் தற்பொழுது அதிமுக பாஜக இரண்டுமே தனித்து இருப்பதால் திமுக 39 இல் ஒரு தொகுதியில் வெற்றியை பெற தவறினாலும் அது திமுகவிற்கு பின்னடைவாக தான் பார்க்கப்படும் என்பது அரசியல் வட்டாரங்களில் நிலவும் பேச்சு! இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் திமுக தவித்து வருகிற நிலையில் முதல்வர் மு க ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்ட உளவுத்துறை ரிப்போர்ட்டல் பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய ஆறு தொகுதிகளில் திமுகவின் தேர்தல் பணிகள் சற்று சுணக்கமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. 

                                                                                                                  

மேலும் இந்த ஆறு பகுதிகளில் திமுகவின் வெற்றி சதவிகிதம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் அந்த பகுதிகளில் எல்லாம் பாஜகவின் பிரச்சாரமானதும் தேர்தல் பணியானதும் முழு வீச்சில் பம்பரமாக விறுவிறுப்பாக நடைபெறுவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி உதயநிதி ஸ்டாலின் தனது இளைஞர் அணிக்காக சண்டையிட்டு பெற்ற ஈரோடு தொகுதியும் இந்த லிஸ்டில் இடம் பெற்றிருப்பது உதயநிதியையும் இந்த ரிப்போர்ட் சற்று டென்ஷன் ஆக வைத்துள்ளதாம்! இதனைத் தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதிலிருந்தே இந்த பகுதிகளில் திமுகவின் பிரச்சாரம் என்பது வலுவெடுக்கவில்லை என்றும் பிரச்சாரத்திற்காக சில முக்கிய அமைச்சர்களை இங்கே இறக்கிய பொழுதும் பெருமளவிலான வரவேற்பு மக்கள் மத்தியில் இல்லை என்றும் கூறப்படுகிறது இதனால் திமுகவின் முதல் தலைவரான மு க ஸ்டாலின் அதிர்ச்சியில் திகைத்து இந்த ஆறு தொகுதிகளில் பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு என்ன செய்வீர்கள் என்று தெரியாது இன்னும் ஐந்து நாட்களில் இந்த பகுதிகளில் எல்லாம் பிரச்சாரங்கள் தீவிரமடைய வேண்டும் என்ற உத்தரவை விட்டுள்ளதாக கூறப்படுகிறது.