24 special

இந்தியாவின் அடுத்த அதிரடி‘ஆபரேஷன் கெல்லர்‘! நாடு முழுவதும் இறங்கிய ராணுவம் ! தமிழகத்தை மார்க் செய்த அஜித் தோவல்!

indian militry
indian militry

பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறது. குறிப்பாக நம் நாட்டுக்கு எதிராக பயங்கரவாதிகளை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது  இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியுடன் முடிந்த கையோடு, தீவிரவாதிகளுக்கு எதிராக ஆபரேஷன் கெல்லரை தொடங்கியுள்ளது இந்திய ராணுவம். அது என்ன ஆபரேஷன் தெரியுமா.?  தீவிரவாதிகளை தேடி சென்று  வேட்டையாடுவதுதான் ஆபரேஷன் கெல்லர் இந்த ஆப்ரேசன் இந்தியா முழுவதும் நடைமுறைபடுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 



ஆபரேசன் சிந்தூரின்  அதிரடி ஆக்ஷனால் நிலைக்குலைந்த பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்ய கெஞ்சியது. இதனை நம் நாடு ஏற்றதால் தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது. ஆனால் தீவிரவாதத்திற்கு எதிரான தாக்குதல் இன்னும் முடியவில்லை என பிரதமர் மோடி தெரிவித்த நிலையில், இன்று ஆபரேஷன் கெல்லர் என்ற தீவிரவாதிகளை தேடி அழிக்கும் வேட்டையை தொடங்கியுள்ளது இந்திய ராணுவம்.முதல் ஆபரேஷன்  உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில், சோபியானில் உள்ள ஷுகல் கெல்லர் என்ற இடத்தில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அங்கு தீவிரவாதிகளை தேடி அழிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது


அதன்படி, இன்று அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்திய இந்திய ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் கடும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில், 3 முக்கிய தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சூட்டுக்கொன்றுள்ளது.அங்கு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.


ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகளை போலீசார் மற்றும் ராணுவத்தினர் தொடர்ந்து தேடிவருகின்றனர். இந்த நடவடிக்கையின் ஒருபகுதியாக வெவ்வேறு பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ‛ஆபரேஷன் கெல்லர்' நடவடிக்கையில் 3 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளை நம் ராணுவம் வீழ்த்தி உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


அது மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் எந்தெந்த பகுதிகளில் தீவிரவாதம் குறித்து உளவுத்துறை தகவல் தெரிவிக்கின்றதோ அப்பகுதிகளிள்  இந்திய ராணுவம் களமிறங்கி தீவிரவாதத்தை வேட்டையாட தயாராக உள்ளதாம் இதற்கு பிரதமர் மோடியும் பச்சை கொடி காட்டிவிட்டாராம். ஜம்மு காஷ்மீர்,  கேரளா,  மேற்குவங்கம், தமிழகம், உள்ளிட்ட மாநிலங்களை தற்போது மார்க் செய்துள்ளதாம் உளவுத்துறை. ஏற்கனவே கொடுத்த தகவல்களின்படியும்  தேசிய புலனாய்வு அவன் பின் அறிக்கைகளின் படியும்  கோவை குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களை கையில் எடுத்துள்ளாரம் அஜித் தோவால். விரைவில் தென் மாநிலங்களில் ராணுவத்தின் வேட்டைகளை எதிர்பார்க்கலாம் என தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. மேலும் தீவிரவாத  செயல்களுக்கு துணைபோகும் அரசியல்வாதிகளை களையெடுக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாம். 


ஏற்கனவே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழகத்தில் சில அமைப்புகள் கூட்டங்கள் நடைபெற்றதாக கூறி  உளவுத்துறை டெல்லிக்கு  தகவல் கொடுத்துள்ளது மேலும் தீவிரவாதிகள் சென்னை வழியாக இலங்கை தப்பி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகின்றது அதனால் தமிழகத்தில் விரைவில் ராணுவ நடவடிக்கைகள் இருக்கும் என உறுதியாக கூறப்படுகிறது