24 special

கனிமொழி இன் ! உதய் அவுட் ! உதய் பெயரை கூட போட விரும்பாத ஸ்டாலின்! கோபாலபுரத்தில் வெடித்த பிரளயம்! மொத்தமாக முடிந்தது!

kanimozhi , udhayanithi
kanimozhi , udhayanithi

தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில்தமிழக அரசியல் கட்சிகள்  அடுத்தடுத்த பல்வேறு தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. தோல்வி பயத்தால் திமுக தரப்பு  தேர்தல் வேளைகளில் இப்போதே இறங்கி வேலை செய்ய ஆரம்பித்துள்ளது.  இதில் மிக முக்கியமானது மண்டலப் பொறுப்பாளர்கள் நியமனம்தான். 2026 தேர்தல் யுத்தத்துக்கு தமது 7 ‘ பேர் கொண்ட குழுவை ’  மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிக்க இருக்கிறார்.திமுகவில் மூத்த அமைச்சர்களில் ‘ஆக்டிவ்’ மோடில் இருக்கக் கூடியவர்கள், பணியாற்றக் கூடிய சீனியர்கள் என்ற கேட்ட திமுக தலைவர் ஸ்டாலின் இந்த மண்டலப் பொறுப்பாளர்கள் பட்டியலைத் தயார் செய்துள்ளாராம். நீலகிரி சென்றிருந்த போது இந்த பட்டியலை இறுதி செய்து ஓகே சொன்னாராம் திமுக தலைவர் ஸ்டாலின்.இதில் உதயநிதியின் பெயர் இல்லை மேலும் அவரின் ஆதரவாளர்கள் பெயரும் இல்லை. 



234 தொகுதிகளை 7 மண்டலங்களாக பிரித்து செயலாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். தூத்துக்குடி, குமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல செயலாளராக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி நியமிக்கப்பட உள்ளார்.திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மண்டலத்தின் செயலாளராக அமைச்சர் கே.என்.நேரு நியமிக்கப்பட உள்ளார்


திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்துக்கு அமைச்சர் எ.வ.வேலுவும், கொங்கு மண்டலத்தில் கரூர், கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும்,  சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை அமைச்சர் சக்கரபாணியும், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்துக்கு தங்கம் தென்னரசுவும், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்துக்கு துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவும் நியமிக்கப்பட உள்ளனர்.


கனிமொழி மற்றும் ஆ.ராசா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாலும் குறிப்பாக உதயநிதிக்கு நெருக்கமாக இருக்கும் அமைச்சர் சேகர்பாபு பெயர் இல்லை அதற்க்கு பதில் ஆ.ராசா பெயர் உள்ளதால் அதிர்ச்சியில் உறைந்துளார் உதயநிதி. இதனிடையே விரைவில் கோபலபுரத்தில் மிகப்பெரிய பிரளயம் வெடிக்க உள்ளது. மேலும் உதயநிதி சென்னை  காஞ்சிபுர மண்டலத்தை பெரிதும் நம்பி இருந்தாராம் ஆனால் அதை கனிமொழியின் ஆதரவாளர் ஆ.ராசாவுக்கு கொடுக்கபட்டுள்ளது. 


முதலமைச்சர் குடும்பத்துக்குள்ளேயே புகைந்து வெளிப்பட ஆரம்பித்திருக்கும் பூசல், தி.மு.க-வினரிடையே பெரும் அதிர்வைக் கிளப்பியிருக்கிறது. சமீபத்தில் நடந்த தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும், முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவிலும் ‘ஆப்சென்ட்’ ஆகியிருக்கிறார் துணை முதலமைச்சரும், தி.மு.க-வின் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின். அதையொட்டித்தான் இப்போது பரபரப்புக் கிளம்பியிருக்கிறது!


 மேலும் தென் மாவட்டங்களை கட்டுப்படுத்தும் பவர்ஃபுல் நபராக கருணாநிதி அழகிரியை வைத்திருந்தாரோ அதே மாதிரி, தென் மாவட்டத்தின் முகமாக, கனிமொழி இருக்க வேண்டும் என்று ராஜாத்தியம்மாள்  ஆசைப்படுவதாகவும் அதை நிறைவேற்றவே கனிமொழி டெல்லி அரசியலுக்கு முழுக்கு போட நினைப்பதாகவும் தகவல் கசிந்த  நிலையில் தற்போது கனிமொழியின் கை ஓங்கியுள்ளது. மேலும் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட கனிமொழி இப்போதே தயாராகி வருவதாகவும் அதற்கான பணிகளை அவர் துரிதப்படுத்தியிருப்பதாகவும் அவரது தரப்பினர் பேசிவருகின்றனர். தமிழக அரசியலில் தன்னுடைய ஆளுமை தொடர்ந்து நீடித்து இருக்க வேண்டும் என்பதற்காகவும் வரும் தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் நிலையில், அமைச்சர் பதவியை பெறவும் அவர் முடிவு எடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் உதயநிதியின் அரசியல் வாழ்க்கைக்கு கனிமொழி முடிவுரை எழுத  ஆரம்பித்துவிட்டார்  என உதயநிதியின் ஆதரவு வகதற தொடங்கிவிட்டார்கள்.