
மோடி தலைமையில் இந்தியா மீண்டும் ஒரு சரித்திர செய்துள்ளது. ரஷ்யாவுடன் இணைந்து பயணிகள் விமானம் தயாரிக்க இந்தியா களமிறங்கியுள்ளது. “மேக் இன் இந்தியா” திட்டத்தின் கீழ் ‘சுகோய் 100’ எனும் புதிய பயணிகள் விமானம், இந்தியாவின் எச்.ஏ.எல் (Hindustan Aeronautics Limited) நிறுவனத்தால் தயாரிக்கப்படவுள்ளது.
இது இந்திய வரலாற்றில் ஒரு மிகப்பெரும் மைல்கல்ஆகும் . இதன் மூலம் போயிங், ஏர்பஸ் போன்ற உலக விமான உற்பத்தி நிறுவனங்களுக்குப் பிறகு இந்தியா தனது பெயரை எழுத உள்ளது.
போர்விமானத்திலிருந்து பயணிகள் விமானம் வரை இந்தியா அடுத்தகட்டத்தை நோக்கி செல்கிறது.
இந்தியாவுக்கு ஏற்கெனவே தன் சொந்த தேஜஸ் போர்விமானம் உண்டு. அதோடு பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளுடன் இணைந்து பல போர் விமான திட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால் பயணிகள் விமானம் தயாரித்தல் என்பது மிகச் சிக்கலான தொழில்நுட்பம். பல முன்னேறிய நாடுகளும் இத்துறையில் கால் வைக்க தயங்கும் நிலையில், இந்தியா தற்போது அதில் தன்னம்பிக்கையுடன் இறங்கியுள்ளது.
மோடி தலைமையிலான மத்திய அரசு விமான தொழில்துறையை வேகமாக வளர்க்கும் நோக்கில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பெங்களூரு, உத்தரப் பிரதேசம், மராட்டிய மாநிலம் உள்ளிட்ட இடங்களில் விமான உற்பத்தி ஆலைகள் உருவாகி வருகின்றன. இதனுடன் வடகிழக்கு மாநிலங்களிலும் சில ஆலைகள் நிறுவப்பட உள்ளன. நமது அண்டை மாநிலமான ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது மாநிலத்துக்குப் பல தொழில்நுட்ப ஆலைகளை ஈர்த்து வருகிறார். பல மாநிலங்கள் இதை ஒரு பொருளாதார வாய்ப்பாகப் பார்க்கின்றன.
ஆனால் தமிழகம் மட்டும், அடுத்த முதல்வர் யார் “இன்பநிதியா கனிமொழியா உதயநிதியா முதல்வர் கனவில்” மூழ்கி, தொழில்துறையின் பெரும் வாய்ப்புகளை இழந்து வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின், தொழில் வளர்ச்சியில் அக்கறை காட்டாமல், திரைப்படங்கள் பார்க்கவும், விமர்சிக்கவும், போட்டோ எடுக்கவும் நேரம் செலவிடுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
திமுக எப்போது பார்த்தாலும் பாசிச “பாஜக, கூத்தாடி விஜய்” என்று திட்டுவதும், “திராவிடம், பகுத்தறிவு, மாநில சுயாட்சி” என்று உரையாற்றுவதுமே இன்று தமிழக அரசின் முக்கியப் பணியாக மாறியுள்ளது. இதன் விளைவாக, மோடி அரசின் பெரும் தொழில்துறை முயற்சிகளில் தமிழகம் புறக்கணிக்கப்பட்ட நிலை ஏற்பட்டுள்ளது.ஓசூர், கோவை போன்ற நகரங்களில் சில உதிரிபாக உற்பத்தி ஆலைகள் மட்டுமே வரக்கூடும் என கூறப்படுகிறது.
இந்தியாவின் வான்தொழில்துறை உலகத்தில் புதிய யுகம் தொடங்குகிறது. இந்தியா இனி பயணிகள் விமானம் தயாரிக்கும் நாடாக மாறுகிறது. இது “வளர்ச்சியின் வானில்” எழும் இந்தியாவின் சின்னமாகும்.mதமிழகம் தன்னுடைய திறமை, தொழில்நுட்ப அடித்தளம், மனிதவளத்தைப் பயன்படுத்தி இருந்தால், இது போன்ற பெரும் விமானத் தளமாக மாறி இருப்பது நிச்சயம். ஆனால் மாநில அரசின் அலட்சியம் காரணமாக, மற்ற மாநிலங்கள் இந்த வாய்ப்புகளை “நன்றியுடன் எடுத்துச் செல்லும்” நிலை உருவாகியுள்ளது.
இந்தியா பறக்கிறது – உலக வானில் தன் தடத்தை பதிக்கிறது. ஆனால் தமிழகமோ விளம்பரம் மட்டுமே செய்து வருகிறது. 15000 கோடி முதலீடு என பொய் சொல்லி மாட்டி கொண்ட திராவிட மாடல் அரசை தான் நாம் பார்த்து வருகிறோம்.
