24 special

நாடே அதிர செய்யும் செய்தி வெளியானது! சவால் விட்ட அன்பில் மகேஷிற்கு விழுந்த ஆப்பு...சத்தமே இல்லாமல் இறங்கிய இடி

MKSTALIN,ANBILMAHESHPOYYAMOZHI
MKSTALIN,ANBILMAHESHPOYYAMOZHI

தமிழகத்தில் தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் கடந்த சில ஆண்டுகளில்  உயர்ந்துள்ளது கல்வித்துறை வட்டாரங்களிலும், பெற்றோர்களிடையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில்,  தமிழகத்தின் நிலை தற்போது தாழ்ந்து வருவதை எச்சரிக்கும் வகையில் பல்வேறு புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன.


2021–2022 கல்வியாண்டில், அதாவது திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஆண்டுதோறும்  இடை நிற்றல்  விகிதம் ஏறிக்கொண்டே போய், 2022–2023ல் 2.3 சதவிகிதமாகவும், 2024–2025ல் 2.7 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது. அதேபோல் நடுநிலைப்பள்ளிகளில் பூஜ்ஜியத்திலிருந்து 2.8 சதவிகிதமாக உயர்ந்திருப்பதோடு, உயர்நிலைப்பள்ளிகளில் 4.5 சதவிகிதத்திலிருந்து 8.5 சதவிகிதமாக உயர்ந்திருப்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். இந்த எண்கள் வெறும் புள்ளிவிவரங்களாகத் தோன்றினாலும், இதன் பின்னால் கல்வியை இழந்த ஆயிரக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலம் புதைந்து கிடக்கிறது என்பதே நிஜம்.

தமிழகத்தில் தற்போது 37 ஆயிரத்து 595 அரசுப் பள்ளிகள், 7 ஆயிரத்து 289 அரசு உதவிப் பள்ளிகள், மேலும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுயநிதிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கல்வி கற்கின்றனர். தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு கல்வியை முறையை மாற்றி அமைக்கவில்லை. ஸ்மார்ட் உலககிற்கு உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது ஒவ்வொரு மாணவரும் பல மொழிகளை பேச விரும்புகிறார்கள் ஆனால்  தமிழக அரசு அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் இருமொழி கொள்கை ஈ.வே.ரா ராமசாமி கலைஞர் கருணாநிதி, என சொல்லி கொடுத்து வருகிறது என்ற குற்ற சாட்டுகள் எழுந்துள்ளது. 

ஆனால் கல்வித்துறையின் சரியான திட்டமிடல் இல்லாததால் , தமிழகத்தில் மட்டும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இடைநிற்றலுக்கு உள்ளாகி, பள்ளியை விட்டு விலகியுள்ளனர் என்பது தமிழ்கத்தின்  கல்வித் தரத்திற்கே ஒரு களங்கமாக மாறியுள்ளது.

 கர்நாடகம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தொடக்கப்பள்ளி மாணவர் இடைநிற்றல் பூஜ்ஜியமாக உள்ளது. கேரளாவில் அது 0.8 சதவிகிதம் மட்டுமே, ஆந்திராவில் 1.4 சதவிகிதம். ஆனால் தமிழகத்தில் மட்டும் 2.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது

மாணவர்கள் இடைநிற்றலுக்கான காரணங்களில் குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி, பெற்றோரின் இடையேயான சிக்கல்கள், வேலைக்குச் செல்ல வேண்டிய அவசரம் போன்றவை உள்ளன அப்படியானால் பொருளாதர ரீதியாகவும் தமிழகம் பின் தங்க ஆரம்பித்துள்ளது. டாஸ்மாக் வருமானத்தை நம்பி தமிழக அரசு இருப்பதால் பல குடும்பங்கள் நாசமாகி போகிறது. அந்த குடும்பத்தில் படிக்கும் பிள்ளைகள் வேளைக்கு செல்ல வேண்டிய சூழலை ஏற்படுத்தி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். 

பள்ளிக்கல்வித் துறை அன்பில் மகேஷ்  தற்போது  மேடையில் எதுகை மோனை பேசுவது உதயநிதியை புகழ்பாடுவதே நோக்கமாக வைத்துள்ளார். 

தமிழக அரசு கல்வி வளர்ச்சியைப் பற்றி பேசும் போது, தரவுகள் வேறொரு உண்மையைச் சொல்கின்றன. கல்வியின் அடிப்படை நோக்கம் ஒவ்வொரு குழந்தையையும் கல்வியால் உயர்த்துவதாக இருக்க வேண்டும். ஆனால் அலட்சியமான நிர்வாகமும், அரசியல் விளம்பரங்களின் மாயையும், கல்வியை உண்மையில் தேவைப்படும் குழந்தைகளுக்கு சென்றடையாமல் தடுத்துவிட்டது. இப்படி தொடர்ந்தால், கல்வியில் முன்னோடியாக இருந்த தமிழகம், அடுத்த சில ஆண்டுகளில் பின் தங்கிய மாநிலங்களின் பட்டியலில் சேர்ந்து விடும் என்றே கல்வி வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.

இந்தியாவின் கல்வி முன்னேற்றத்தில் தமிழகத்தின் பங்கு எப்போதும் பெருமையாக இருந்தது. ஆனால் இன்று அந்த பெருமை மங்கியுள்ளது. இதைத் திருத்துவது ஒரு கணத்தில் சாத்தியமில்லை. அரசு தனது அலட்சியத்தை ஒதுக்கி, மாணவர்களின் நலனுக்காக நேர்மையான முயற்சிகளைத் தொடங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இல்லையெனில், பள்ளி விட்டு விலகும் ஒவ்வொரு குழந்தையும், நாளைய சமூகத்தின் ஒரு இழப்பாகவே மாறும்.