24 special

பவரை காட்டிய இந்தியா! உலகுக்கு கட் அண்ட் ரைட்டாக இந்தியா சொன்ன செய்தி! வெளியான முக்கிய தகவல்!

modi
modi

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர். இதற்காக பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்த நடவடிக்கை கடந்த 7 ம் தேதி தொடங்கியது.பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும் 3 விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன.இதையடுத்து பாகிஸ்தானும் ஏவுகணை, ட்ரோன், போர் விமானங்கள் மூலம் தாக்குதலுக்கு முயன்றது. இது நம் நாட்டின் முப்படைகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. இதனால் பாகிஸ்தான் பெரும் சிக்கலில் மாட்டி கொண்டது. ஒருபுறம் நம் நாட்டின் தாக்குதலை தடுக்க முடியாமலும், மறுபுறம் நம் நாட்டை தாக்க முயன்ற முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாலும் பாகிஸ்தான் தோல்வியை நோக்கி சென்றது.



இதையடுத்து போரை நிறுத்தும்படி நம் நாட்டிடம் பாகிஸ்தான் கெஞ்சியது. நம் நாடும் போரை நிறுத்த ஒப்புக்கொண்டது. இதையடுத்து போர் நிறுத்தம் அமலாகி உள்ளது. இருப்பினும் கூட பாகிஸ்தான் ராணுவம், பயங்கரவாதிகள் கொண்டு தாக்கினால் மீண்டும் பதிலடி கொடுப்போம். போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் செயல்படும் பட்சத்தில் அந்த நாட்டுக்கு பதிலடி கொடுக்க நம் முப்படைகளுக்கு சுதந்திரம் வழங்கி மத்திய அரசு அறிவித்துள்ளது.


முதலில் நடத்திய தாக்குதல் பாகிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது மட்டுமே நிகழ்த்தப்பட்டது. ராணுவத்தை இந்தியா முதலில் தாக்கவில்லை.தேவையில்லாமல் பயங்கரவாதிகளை பாதுகாக்க பாக். ராணுவம் களம் இறங்கியது. அதன் பின் தான்  பாக்., ராணுவத்தை தாக்க ஆரம்பித்தது.. இந்த சண்டையில்  பாகிஸ்தான் பல்வேறு இழப்புகளை சந்திக்க நேரிட்டது. பாக். ராணுவம் மிக அவர்களின் முழு பலத்தையும் காட்டியும் ஆக்ரோஷமாக இந்திய குடியிருப்புகளை நோக்கி தாக்கினார்கள் கூடவே தீவிரவாதிகளும் இந்தியாவை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்கள். 


பாகிஸ்தானின் தாக்குதலை அசால்ட்டாக டீல் செய்தார்கள் நம் ராணுவ படை. ராணுவ உட்கட்டமைப்புகளுக்கு பெரிதான சேதங்கள் ஏற்படவில்லை. அடுத்தடுத்து ஏவுகணைகள், ட்ரோன்களை பாக்., ஏவினாலும் முப்படைகளின் பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை சுக்குநுாறாக்கி.  துருக்கி மற்றும் சீனாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களைத் தான் பாகிஸ்தான் அதிகமாக பயன்படுத்தியது. துருக்கி ட்ரோன் உலகில் முதன்மையான ட்ரோன் வகை ஆகும். அதை வீழ்த்தமுடியாது என மார்த்தட்டி கொண்டது துருக்கி அதை லெப்ட் ஹேண்டில் டீல் செய்ததுள்ளது இந்தியா வான் பாதுகாப்பு அமைப்பு. இது உலகக்குகே ஆச்சர்யம் அளித்துள்ளது. 


மேலும் அந்த ட்ரோன்களால், அதன்  இலக்கை அடைய முடியவில்லை. இந்தியா  மீது ஏவப்பட்ட சீனாவின், 'பிஎல் - 15' ஏவுகணை வானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டது. அதன் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.நம் வான் தடுப்பு அமைப்புகள், அதை இயக்கும் பயிற்சி பெற்ற வீரர்கள், உள்நாட்டு தயாரிப்பு திறன் ஆகியவை இந்த சண்டையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.எதிரிகளிடம் எந்தவிதமான தொழில்நுட்பம் இருந்தாலும் அதை வீழ்த்த நாம் தயாராக உள்ளோம். அதை வார்த்தைகளில் மட்டுமின்றி செயலிலும் பார்த்தோம் .  


 இந்தியா - பாக்., இடையே நடந்த சண்டையில், 'ஸ்கால்ப்' ஏவுகணைகள் மற்றும், 'ஹேமர்' வெடிகுண்டுகளை பாக்கிஸ்தான் மீது, நம் ராணுவம் வீசியது.சீனாவிடம் இருந்து பாக் வாங்கிய, எச்.க்யூ. 9பி மற்றும் எச்.க்யூ.16 வான் பாதுகாப்பு கவச அமைப்புகள் இந்த தாக்குதல்களை கண்டறிந்து தகர்க்க தவறிவிட்டன. இவை, குறைந்த உயரத்தில் பறந்து வரும் ஏவுகணைகளை அடையாளம் கண்டு அழிக்க தவறிவிட்டன.இது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தும், 81 சதவீத ஆயுதங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. ராணுவ உபகரணங்களில் பாகிஸ்தான் சீனாவை சார்ந்தே உள்ளது.மேலும், ஜே 20 போன்ற தங்கள் நவீன போர் விமானங்களை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்ள சீனா தயாராக இல்லை.இதனால், காலாவதியான தொழில்நுட்பங்களுடன் பாக்கிஸ்தான்தள்ளாடி வருகிறது.வெறும் 25 நிமிடங்களில். பாகிஸ்தானை கலங்கடிக்க செய்தது இந்தியா. உலகுக்கே பவரை காட்டியது.