24 special

இந்தியா எங்க நண்பன்தான்..! அதிரடியாக அறிவித்த ஈரான்..! பாகிஸ்தான், சீனாவுக்கு விழுந்த ஆப்பு! இது தான் இந்தியா பவர்!

PMMODI,IRAN
PMMODI,IRAN

மத்திய கிழக்கு பகுதியில் ஜூன் மாதத்தில் தினமும் ஏவுகணைகள் பறந்து அப்பகுதி மக்களின் தூக்கத்தை தொலைத்தது. இது மட்டும் அல்லாமல் இஸ்ரேல் நாட்டின் தாக்குதல் காரணமாக ஈரான் நாட்டில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுத்தப்படாமல் நின்றது பலருக்கும் தெரியும். இதோடு உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய்யை விநியோகம் செய்யப்படும் ஹார்முஸ் நீரிணை மூடப்படும் அபாயத்தில் இருந்தது.


இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் உயரும் என்று உலகமே எதிர்பார்த்தது. இந்த சூழ்நிலையில் கணிக்கப்பட்டப்படியே பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு கட்டத்தில் 80 டாலர்களை தாண்டியது, ஆனால் சில நாட்களில் 65 டாலர்களுக்கு கீழே சரிந்தது. இது தான் தற்போது பலரையும் ஆச்சிரியத்திலும், குழப்பத்திலும் தள்ளியுள்ளது.இதற்கு காரணம் இந்தியா தான் என்கிறது மத்திய கிழக்கு நாடுகள். கச்சா எண்ணெய் வாகுவதில் இரண்டாம் இடத்தில் உள்ளது இந்தியா. சில மத்திய கிழக்கு நாடுகள் இந்தியாவை நம்பித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் ஈரான் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு இந்தியா உதவியுள்ளது. இதனை தொடர்ந்து தான் கச்சா எண்ணெய் விலை குறைய ஆரம்பித்துள்ளது. 

 இஸ்ரேல் ஈரான் மீது உச்சகட்ட தாக்குதலை நடத்தி கொண்டிருந்தது,அப்போது ஈரான்  அதிபர் மசூத் பெசெஷ்கியன் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதற்கு காரணம் இஸ்ரேலின் உற்ற நண்பர் தான் இந்தியா என்பது அனைவருக்கும் தெரிந்ததே, ஈரான் அதிபர்பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசிய அடுத்த நாளே   இஸ்ரேல் உடனான சண்டையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முதலில் போர் நிறுத்தம் இல்லை என்று கூறிய ஈரான்இந்தியாவுடன் பேசிய பிறகு தான் போர் நிறுத்தத்தை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இஸ்ரேல் ஈரான் போரின் போது பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகள் இந்தியா இஸ்ரேலின் பக்கம் இஸ்லாமியர்கள் பக்கம் இல்லை என் போலி செய்திகளை பரப்பி வந்தன.அதை இந்தியாவில் உள்ள சில அமைப்புகளும் பகிர்ந்தது, இந்திய அரசுக்கு எதிராக போராட்டங்களும் ஈரானுக்கு ஆதரவாக போராட்டங்களும் நடந்தது. இதற்கிடையில் ஈரான் அவர்கள் முகத்தில் கரியை பூசியுள்ளது. 

இந்​தி​யா​வில் உள்ள ஈரான் தூதரகம்  4 சமூக வலைதள பதிவு​களை தனது எக்ஸ் தளத்​தில் பகிர்ந்தது. மேலும், இந்​தியா - ஈரான் நல்​லுறவை சீர்​குலைக்க இந்த பதிவு​கள் போலி​யாக வெளி​யிடப்​பட்​டுள்​ளன. அந்​தப் பதிவு​கள் வெளி​யான சமூக வலை​தளங்​கள் ஈரான் அரசின் அதி​காரப்​பூர்​வ​மானவை அல்ல. அவற்​றுக்​கும் ஈரான் அரசுக்​கும் தொடர்​பில்லை என்று எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

ஈரான் தூதரகம் வெளி​யிட்ட 4 போலி சமூக வலைதள பதிவு​களில் ஒன்​றில், ‘‘அமெரிக்க விமானம் இந்​திய வான் பரப்​பில் பறந்து செல்​வதற்கு அனு​மதி அளித்​த​தால், சபாஹர் துறை​முக ஒப்​பந்​தத்தை ஈரான் மறு​பரிசீலனை செய்து வரு​கிறது’’ என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இது போலி செய்​தி, போலி எக்ஸ் வலைதள கணக்கு என்று ஈரான் தூதரகம் திட்​ட​வட்​ட​மாக மறுத்​துள்​ளது. மேலும், இந்த பதிவு பாகிஸ்​தானின் கராச்சி நகரில் இருந்து வெளி​யிடப்​பட்​டது கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்​ளது.இந்​தி​ய உறவை சீர்​குலைக்க சில சமூகவிரோத சக்​தி​கள் செயல்​பட்டு வரு​கின்​றன. இந்​தி​யா​வுட​னான வர்த்​தகம், ஒத்​துழைப்​பு, கலாச்​சார பரி​மாற்​றம் பல ஆண்​டு​களாக வலு​வாக உள்​ளது. அது தொடர்ந்து நீடிக்​கும் என்று ஈரான்​ தூதரகம்​ திட்​ட​வட்​ட​மாக கூறி​யுள்ளது.