24 special

இந்தியா எடுத்த அதிரடி முடிவு...நிலைகுலைந்த டிரம்ப்! அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

இந்தியாவின் மேல் ட்ரம்ப் கடுமைகாட்ட பல காரணம் உண்டு, வேகமான இந்திய பொருள்தாரம் , அதிகரித்து வரும் ராணுவ பலம், 90 நாடுகளுக்கு  ஆயுதங்கள் ஏற்றுமதி  மற்றும் உலகின் சுத்திகரிக்கபட்ட எண்ணெய் ஏற்றுமதியில் இரண்டாம் இடம் , பொருளாதார வளர்ச்சியில் 4 ஆம் இடம் டிஜிட்டல் பரிவர்த்தனை உலகம் முழுவதும் ரூபாய் மதிப்பில் வர்த்தகம், இறக்குமதிகளை குறைப்பது, மேக் இன் இந்தியா  என அடுக்கி கொண்டே போகலாம். இதில் மிகவும் முக்கியமானது அன்னிய பணவரவுக்கு கட்டுபாடு விதித்தது தான். 


இந்தியாவில் கணக்கு காட்டாத அந்நிய பணங்கள் வெள்ளமெனப் பாய்ந்தன, இங்கு மதமாற்றம் உள்பட எல்லாவற்றுக்கும் அதுதான் அடிப்படை, இந்த உத்தி பிரிட்டிஷ்காரன் காலத்தில் இருந்து உண்டு மோடி அரசு அதை துணிச்சலாக மாற்றிற்று, இப்போது அந்நிய நாட்டு பணம் உரிய ஆதாரமில்லாமல் தேவை இல்லாமல் வரமுடியாது இதனால் மதமாற்றும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் மக்களுக்கு பலன் கிடைப்பதை மறுக்க முடியாது. எனினும் மக்கள் நலன் என்ற பெயரில் சில தொண்டு நிறுவனங்கள் நடத்தும் போராட்டங்களால் நாட்டின் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகின்றன. மக்களுக்கு சேவை செய்வதை நோக்கமாக வைத்து என்.ஜி.ஒ., எனப்படும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. பேரரழிவு நிவாரணம் வழங்குவது முதல், ஏழை எளியோருக்கு சட்ட உதவி செய்வது உட்பட பல்வேறு துறைகளிலும் இந்த அமைப்புகள் செயல்படுகின்றன.

தொண்டு நிறுவனங்களால் சமூகத்தில் மாற்றம் ஏற்படுவதை மறுக்க முடியாது. வளர்ச்சி திட்டங்கள் மக்களை சென்றடைவதிலும் தொண்டு நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. நாட்டில் 34லட்சத்துக்கும் அதிகமான என்.ஜி.ஓ.,க்கள் செயல்படுகின்றன. இவற்றால் பலன்கள் உள்ளன என்ற போதும் சில தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளால் நாட்டின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது என்பதும் உண்மை.மக்கள் நலன், மக்களுக்கு பாதிப்பு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு என்ற பெயரில் போராட்டங்கள் நடத்தி வளர்ச்சி திட்டங்ளை செயல்படுத்தவிடாமல் சில தொண்டு நிறுவனங்கள் தடுக்கின்றன.

இதனால் நாட்டில் வளர்ச்சி பாதிக்கப்பட்டு சர்வதேச அளவில் இந்தியா பல இழப்புகளையும் சந்தித்து வருகிறது. இதற்க சரியான உதாரணம் துாத்துக்குடி 'ஸ்டெர்லைட்' ஆலை விவகாரம் தான். கடந்த சில ஆண்டுகள் வரை  வரை இந்த ஆலை அதிகளவில் சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தை தயாரித்து வந்தது. இதனால் சீனா உட்பட பல நாடுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தை இந்தியா அதிகளவில் ஏற்றுமதி செய்து வந்தது.

சுற்றுச்சூழலும், மக்களும் பெருமளவில் பாதிக்கப்படுவதாக கூறி இந்த ஆலையை மூடக்கோரி சில என்.ஜி.ஓ.,க்கள் பேராட்டத்தை துவக்கின. இது பெரியளவில் வெடித்தையடுத்து ஆலையை மூடும்படி 2018ல் தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் விளைவாக தாமிரத்தை இறக்குமதி செய்யும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய பாகிஸ்தான், இப்போது சீனாவுக்கு அதிகளவில் தாமிரத்தை ஏற்றுமதி செய்து வருகிறது. ஸ்டெர்லைட் ஆலை உட்பட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை எதிர்த்து நடக்கும் போராட்டங்களுக்கு சீனா, அமெரிக்கா மற்றும் இந்திய விரோத சக்திகள் நிதியுதவி செய்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்தியா வளர்ச்சி அடைவது வல்லரசு நாடுகளுக்கு பிடிக்கவில்லை என்பது தெரிந்தது தான். அதனால் தான், இந்திய வளர்ச்சியை தடுக்க சில தொண்டு நிறுவனங்களை பகடைக்காயாக பயன்படுத்துகின்றன.மக்களை துாண்டி விட்டு பேராட்டங்களை நடத்த வைத்து இதுபோன்ற தொண்டு நிறுவனங்கள், கோடிக்கணக்கில் சம்பாதித்து விடுகின்றன. அதனால் மக்கள் இந்த தொண்டு நிறுவனங்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இதனை தொடர்ந்து தான் மோடி அரசு தன்னார்வ தொண்டு நிறுனவங்களை கண்காணித்து புதிய சட்டத்தை விதித்துள்ளது. இதனை தொடர்ந்து அந்நிய நாட்டு பணம் இந்தியாவிற்கு தடுக்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.