24 special

கோவையில் தங்க சொரங்கத்தை கொட்டினாலும் வேலைக்காகாது..!

Annamalai, Stalin
Annamalai, Stalin

கோவை தொகுதியில் பாஜக கட்சியில் போட்டியிடும் பாராளுமன்ற வேட்பாளர் அண்ணாமலை, கோவை சரவணம்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் பாஜக வெற்றி வாய்ப்பு குறித்தும், நேற்று பறிமுதல் செய்யப்பட்ட 4கோடி தொகைக்கு விளக்கமும் கொடுத்துள்ளார் அண்ணாமலை. தொடர்ந்து செந்தில்பாலாஜி குறித்து குட்டி கதை ஒன்றையும் கூறியுள்ளார்.


                                                                                            

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் களமிறங்குகிறார், அதிமுக வேட்பாளர் சிங்கை இராமச்சந்திரனும் திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் களமிறங்குகிறார். முன்னதாகவே திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கோவையில் போட்டியிடுவதற்கு காரணமே செந்தில்பாலாஜி என்று கூறப்பட்டது. கோவையில் கவனம் செலுத்தாத திமுக கூட்டணிக்கே அந்த தொகுதியை கொடுத்து வரும் இந்நிலையில், திமுகமுதன் முதலாக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. வேட்பாளரின் பின்புலத்தை பார்க்கும்போது சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்ட உத்தரவின் பேரில் நிற்பதாக சில தகவல் வந்தது.

                                                                                         

இந்நிலையில், இன்று அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில், நயினார் நாகேந்திரனுக்கு எதிரான சதி வலையில் அவர் பெயர் சொல்லப்பட்டுள்ளது. ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றனர். பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் சோதனை நடத்த வேண்டும் என்று ஆர்.எஸ். பரத்தில் கூறியிருப்பது, ஒரு வீட்டிலிருந்து திருடன் ஓடிவந்து காவல்துறையை குழப்புவதற்காக திருடன் திருடன் என்று கத்துவது போல் உள்ளது. கோவையில் தங்க சுரங்கத்தையே கொண்டு வந்து கொட்டினாலும் மக்கள் தாமரை சின்னத்தைக்கு தான் வாக்களிப்பார்கள். 

                                                                           

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, கோவையின் திமுக தேர்தல் களத்தை செந்தில் பாலாஜி சிறையில் இருந்து இயக்கி வருகிறார். அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மற்றும் கரூர் கம்பெனி ஆட்களிடம் சிறயில் இருந்து செந்தில் பாலாஜி பேசி வருகிறார். டி.ஆர்.பி ராஜாவுக்கு அவர் தான் கதை, திரைக்கதை, வசனம் எழுதி கொடுத்து இருக்கிறார். அதனை டி.ஆர்.பி ராஜா செய்து வருகிறார் ஆனால், இந்த முறை என்ன கதை, திரைக்கதை எழுதி கொடுத்தாலும் கோவை மக்கள்மாறுவதாக இல்லை பாஜக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது என்று கூறினார்.

                                                                              

கோவையில் மக்கள் அண்ணாமலைக்கு மட்டுமே ஒட்டு என்று கூறி வருகின்றனர். கோவையில் திமுக அதிமுக இரு கட்சிகளும்  என்னதான் பரிசு மழை கொட்டினாலும் அங்கு வெற்றி பெறுவதர்க்கு வாய்ப்பு இல்லை மக்கள் திருந்தி விட்டார்கள் இதனால் அண்ணாமலை வெற்றி பெறுவது உறுதியாகி விட்டதாக அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.