24 special

கோவிலுக்கு சென்றால் குத்தமா! நிராகரிப்பை சந்தித்த பாரதி பாஸ்கர்!

bharathy baskar
bharathy baskar

பாரதி பாஸ்கர் என்பவர் திறமையான தமிழ் பேச்சாளர், பல தொலைக்காட்சிகள் நடத்தும் பட்டிமன்றங்களில் அதிரடியாக பேசி தன் பக்கம் ரசிகர்களை ஈர்த்தவர் அதிலும் குறிப்பாக சன் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பட்டிமன்றங்களில் அதிகமாக கலந்து கொண்டு பிரபலமானவர் பாரதி பாஸ்கர்! இவர் பட்டிமன்றங்களை தாண்டி கல்கியின் சிறுகதைகள், தினமணி பத்திரிகையில் சில கட்டுரைகள், அவள் விகடனில் நீ நதி போல ஓடிக் கொண்டிரு என்ற தொடர் கட்டுரையும் எழுதி இருந்தார் அதோடு அப்பா என்னும் வில்லன் என்கின்ற நூல்களையும் எழுதி பிரபலமானவர். மேலும் மேடைப்பேச்சியில் இவர் கூறும் கருத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் கரகோஷங்கள் எழும்பி கொண்டே இருக்கும். சிரிப்பில் பார்வையாளர்கள் அனைவரும் வயிறு வலித்து டயர்ட் ஆகி விடுவார்கள் அப்படி அனல் பறக்கும் பேச்சிற்கு சொந்தக்காரராக இருந்தவர் பாரதி பாஸ்கர். இந்த நிலையில் இவருக்கு தற்போது ஒரு நிகழ்ச்சியில் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது சமீபத்தில் ஒட்டுமொத்த இந்து சமய மக்களும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வந்த வரலாற்று நிகழ்வு கடந்த ஜனவரி 22 ஆம் தேதி அன்று நிகழ்ந்தது. 


ராமர் பிறந்து மக்களுக்காக ஆட்சி புரிந்த இடமாக கருதப்படுகின்ற அயோத்தியில் ராமரைக்காக ஒரு பிரம்மாண்ட கோவில் கட்டப்பட்டு அதில் குழந்தை ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு பிறகு அயோத்திக்கு ராமர் வந்திருக்கிறார் என்றும் அவரை ஒருமுறை பார்த்தால் போதும்! இப்படி ஒரு நிகழ்வு நடக்காதா! என்று தான் இத்தனை வருடங்கள் காத்துக் கொண்டிருந்தோம் என பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து அயோத்தி ராமர் கோவிலை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி 22ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல பிரபலங்கள் பிரமுகர்கள் கலந்து கொண்ட அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவில் பட்டிமன்ற பேச்சாளரான பாரதி பாஸ்கரன் கலந்து கொண்டார். மேலும், கும்பாபிஷேக விழாவில் பாரதி பாஸ்கர், சரித்திரம் படைக்கப்படும் இந்த இடத்தில் இந்த தருணத்தில் நான் இருப்பது எனக்கு சிளிர்ப்பையும் பரவசத்தையும் ஏற்படுகிறது. நம்முடைய நாட்டினுடைய அறத்தின் தலைவன் ராமன்! அந்த அறத்தை சொன்ன ராமனையும், கம்பனையும் இந்த நேரத்தில் நான் வணங்குகிறேன். இந்த இடத்தில் இருக்க கிடைத்த பெறும் பேறு என தனது மகிழ்ச்சியை பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்து இருந்தார்.

இந்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியான பொழுது பாரதி பாஸ்கருக்கு எதிரான விமர்சனங்களை இடதுசாரிகள் முன்வைக்க ஆரம்பித்தனர். அதோடு இடதுசாரிகளால் பாரதி பாஸ்கர் ட்ரொள் செய்யப்பட்டார். இந்த நிலையில், தமிழ் மாணவர்களின் கல்வி விளையாட்டு தனித்திறமை சார்ந்த சாதனைகளை வெளிக்கொண்டு வருவதற்காக ரியாத் தமிழ்ச் சங்கம் சார்பில் மாணவர்கள் கலை விழா 2024 என்ற தலைப்பில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த விழாவில் பட்டிமன்ற பேச்சாளரான பாரதி பாஸ்கரை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளனர். அதாவது பிப்ரவரி இரண்டாம் தேதி மாலை 5 மணி முதல் இந்திய பண்பாட்டுப் பள்ளி அரங்கத்தில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிப்புகள் வெளியாகி இதில் பாரதி பாஸ்கர் கலந்து கொள்ள உள்ளார் என்ற வகையில் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது ஆனால் திடீரென்று பாரதி பாஸ்கர் இந்த விழாவில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால், கோவிலுக்கு சென்றது அவ்வளவு பெரிய குற்றமா என பாரதி பாஸ்கர் நிராகரித்த ரியாத் தமிழ் சங்கத்திற்கு சமூக வலைத்தளத்தில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.